டெஸ்லா நிர்வாகத்தின் அதிரவைக்கும் நடவடிக்கை... கேள்விக்குறியாகும் எலோன் மஸ்கின் நிலை
ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் அவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால் ஏற்பட்ட எதிர்மறையான அழுத்தங்கள் மற்றும் பங்கு விலையில் ஏற்பட்ட சரிவுகளுக்கு மத்தியில் டெஸ்லா நிர்வாகம் எலோன் மஸ்கை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய தலைவரைக் கண்டுபிடிக்க
கடந்த இரண்டு தசாப்தங்களாக டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக எலோன் மஸ்க் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு புதிய தலைவரைக் கண்டுபிடிக்க அந்த நிறுவனம் தேடலைத் தொடங்கியது.
தமது நிர்வாகத்தில் எலோன் மஸ்கின் பணி சிறப்பாக இருந்தது என ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டியிருந்தாலும், கார் தொழிலில் மஸ்க் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, மஸ்க் தனது அன்றாட வேலைக்குத் திரும்புவதாக உறுதியளித்து பொது அறிக்கையை வெளியிடுமாறு டெஸ்லா நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டார், இல்லையெனில் வேலையை இழக்க நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டார்.
அதற்கு உடனடியாக பதிலளித்துள்ள எலோன் மஸ்க், தமது நேரத்தை டெஸ்லாவிற்கு அதிகமாக அர்ப்பணிப்பதாக அறிவித்தார். இருப்பினும், டெஸ்லா நிர்வாகம் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரை தெரிவு செய்யும் செயல்முறையைத் தொடங்க பல நிர்வாக தேடல் நிறுவனங்களின் ஆலோசனையை நாடியுள்ளது.
முதலீட்டாளர்களும் அதிருப்தி
டெஸ்லா நிர்வாகத்தின் இந்த முடிவு எலோன் மஸ்க் அறிந்திருக்கிறாரா, அல்லது அவர் தலைமை நிர்வாக அதிகாரியாக செய்லபட்டு வரும் நிலையிலேயே அவருக்கு பதிலாக புதிதாக ஒருவரை தெரிவு செய்யும் நடவடிக்கையை அடுத்து அவர் மேலும் தொடர்வாரா என்பதில் உறுதியான தகவல் இல்லை.
கடந்த ஆண்டு முதல் காலாண்டில் டெஸ்லா நிறுவனம் 1.4 பில்லியன் டொலர் ஆதாயத்தை உருவாக்கியிருந்த நிலையில் தற்போது 409 மில்லியன் டொலர்கள் என கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. முதலீட்டாளர்களும் டெஸ்லாவின் தற்போதையை நிலையில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஜனவரி மாதத்திலிருந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலை அதன் மதிப்பில் கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது. அரசியலில் தனது முயற்சிகள் தற்போதைக்கு தனது நிறுவனத்தை சேதப்படுத்தியிருக்கலாம் என்று மஸ்க் ஒப்புக்கொண்டார், இருப்பினும் உலகப் பொருளாதாரமும் இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |