டெஸ்லா கார் விற்பனையில் புதிய மாற்றம்: எலான் மஸ்க் முக்கிய அறிவிப்பு
டெஸ்லாவின் முழு தானியங்கி ஓட்டுநர் மென்பொருள்(FSD) இனி சந்தா முறைப்படி மட்டுமே கிடைக்கும் என்று அந்த நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் புதிய அறிவிப்பு
பிரபல மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா தங்களுடைய பிரீமியம் ஓட்டுநர் உதவி மென்பொருளான Full Self Driving இனி சந்தா முறையில் மட்டுமே வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எலான் மஸ்க் தன்னுடைய X தள பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், FSD மென்பொருளை முழுமையாக சொந்தமாக வாங்கி கொள்வதற்கான காலக்கெடுவை அறிவித்துள்ளார்.

இதன்படி பிப்ரவரி 14ம் திகதி பிறகு SD மென்பொருளை முழுமையாக சொந்தமாக வாங்கி கொள்ளும் முறையை டெஸ்லா அதிகாரப்பூர்வமாக நிறுத்திக் கொள்ளும்.
இதற்கு மாற்றகாக SD மென்பொருளை பயனர்கள் விரும்பினால் சந்தா முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
சந்தா விலை விவரங்கள்
குறிப்பிட்ட திகதிக்குள் சுமார் $8000 டொலரை ஒரே கட்டணமாக செலுத்தியோ, மாதத்திற்கு $99 டொலர் சந்தா-வாக செலுத்தியோ இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றமானது டெஸ்லா நிறுவனத்தின் வருவாயை முறையை சீரமைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |