டெஸ்லா வாகனங்களை சேதப்படுத்தினால்... கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப்

Donald Trump Elon Musk Tesla
By Arbin Mar 21, 2025 05:58 PM GMT
Report

டெஸ்லா வாகனங்கள் மற்றும் அதன் மையங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

மிக மோசமான சிறைக்கு

மேலும், குறித்த நபர்கள் எல் சால்வடாரில் உள்ள உலகிலேயே மிக மோசமான சிறைக்கு அனுப்பப்படலாம் என்றும் எச்சரித்துள்ளார். அமெரிக்கா உட்பட பல நாடுகளில் எலோன் மஸ்க் மற்றும் அவரது டெஸ்லா வாகனங்களுக்கு எதிராக எழுந்துள்ள திடீர் எதிர்ப்பலைகளுக்கு மத்தியில்,

டெஸ்லா வாகனங்களை சேதப்படுத்தினால்... கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப் | Tesla Vandals Could Serve Jail

டெஸ்லா சொத்துக்களைத் தாக்க பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தியதாக மூன்று பேர் மீது நீதித்துறை குற்றம் சாட்டியதை அடுத்தே ஜனாதிபதி இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

சிலர் தங்கள் டெஸ்லா வாகனங்களில், எலோன் மஸ்க் தனது சுய புத்தியை இழக்கும் முன்னர் வாங்கிய வாகனம் இதுவெனவும் ஸ்டிக்கர் பதித்துள்ளனர். சமீப நாட்களில் கடும் பின்னடைவை எதிர்கொண்டுவரும் எலோன் மஸ்க் மற்றும் டெஸ்லா நிறுவனத்திற்கும் ஆதரவாக ஜனாதிபதி ட்ரம்ப் பேசி வருகிறார்.

கட்டாய இராணுவச் சேர்க்கை உட்பட... உலகப் போருக்குத் தயாராகி வரும் மொத்த ஐரோப்பா

கட்டாய இராணுவச் சேர்க்கை உட்பட... உலகப் போருக்குத் தயாராகி வரும் மொத்த ஐரோப்பா

அத்துடன் டெஸ்லா நிறுவனத்தை தமது ஆதரவாளர்களிடம் விளம்பரப்படுத்தவும் அதன் பங்குகளில் முதலீட்டை ஊக்குவிக்கவும் முயற்சிகளை முன்னெடுக்கிறார். கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் டெஸ்லா நிறுவனம் பங்குச் சந்தையில் 50 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

பல ஆயிரம் அரசு ஊழியர்கள்

இதற்கு முதன்மை காரணமாக கூறப்படுவது ட்ரம்ப் நிர்வாகத்தில் எலோன் மஸ்க் தலைமையில் செயல்படும் DOGE என்ற அமைப்பின் செயல்பாடுகளே என தெரிவிக்கின்றனர்.

டெஸ்லா வாகனங்களை சேதப்படுத்தினால்... கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப் | Tesla Vandals Could Serve Jail

DOGE அமைப்பால், பல ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். பல அரசு அமைப்புகள் மூடப்பட்டு வருகிறது. இதன் எதிர்வினையாகவே மக்கள் டெஸ்லா நிறுவனத்தின் மீது திரும்பியுள்ளனர்.

மேலும், டெஸ்லா வாகனங்கள் மீதும் அதன் மையங்கள் மீதுமான தாக்குதல்களை உள்ளூர் பயங்கரவாதம் என ட்ரம்ப் நிர்வாகம் அடையாளப்படுத்தி வருகிறது.

பிரெஞ்சு குடியுரிமையை கைவிட்டு... நாடொன்றின் ஜனாதிபதியாக களமிறங்கவிருக்கும் பிரபலம்

பிரெஞ்சு குடியுரிமையை கைவிட்டு... நாடொன்றின் ஜனாதிபதியாக களமிறங்கவிருக்கும் பிரபலம்

டெஸ்லா மீதான தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் குறைந்தது மூன்று நபர்கள் பெடரல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி உறுதிப்படுத்தியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US