சுவிட்சர்லாந்தில் PCR சோதனை மீண்டும் இலவசமா? பெடரல் அரசாங்கம் முக்கிய தகவல்
சுவிட்சர்லாந்தில் திங்கட்கிழமை முதல் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்படும் நிலையில், PCR சோதனையும் இலவசமாக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் மீண்டும் உச்சமடைந்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் PCR சோதனை உட்பட குறிப்பிட்ட பரிசோதனைகள் மீண்டும் இலவசமாக்கப்படுவதுடன், அதில் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சான்றிதழ் தொடர்பான பரிசோதனைகள் சனிக்கிழமை முதல் மீண்டும் ஆமுலுக்கு கொண்டுவரப்படுவதாக பெடரல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ஆன்டிஜென் துரித சோதனைகள் மற்றும் உமிழ்நீர் PCR சோதனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
தொற்று அறிகுறிகள் காணப்பட்டு முன்னெடுக்கப்படும் PCR சோதனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தனிப்பட்ட PCR சோதனைகள், ஆன்டிபாடி சோதனைகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
இனிமுதல் சுவிட்சர்லாந்துக்கு வருகைதரும் பயணிகள் அனைவரும் கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். 72 மணி நேரத்திற்குள் முன்னெடுத்த PCR சோதனை முடிவுகள் அல்லது ஆன்டிஜென் துரித சோதனைகள் ஏற்கப்படும்.
குறித்த சோதனைகள் கட்டாயம் 24 மணி நேரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் இதற்கான கட்டணங்கள் பயணிகளே செலுத்த நேரிடும். பேருந்து அல்லது விமான பயணிகள் கண்டிப்பாக கொரோனா சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
நாட்டிற்குள் நுழையும்போது கொரோனா பாதிப்பில்லை என்ற சோதனை முடிவைக் காட்ட முடியாதவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மட்டுமின்றி, குறித்த நபர்கள் உடனடியாக கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.