Seattle Orcas அணியை அடித்து நொறுக்கிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்! தெறிக்கவிட்ட பார்ட்மேன்
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சியாட்டல் ஆர்க்ஸ் அணியை துவம்சம் செய்தது.
டல்லாஸில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய டெக்சாஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் குவித்தது.
சாவேஜ் 27 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்களும், பாப் டூ பிளெஸ்ஸிஸ் 17 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்களும் விளாசினர்.
A Monster @NTTDATA Six sent into the crowd by Texas Super Kings, Mitchell Santner ☄️
— Major League Cricket (@MLCricket) July 24, 2024
#MLC2024 | #NTTData | #CognizantMajorLeagueCricket | #T20 | #SOvTSK pic.twitter.com/GTsBmI3kHO
அயன் தேசாய், கீமோ பவுல் தலா 2 விக்கெட்டுகளும், கன்னோன், பர்க்கர் மற்றும் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய சியாட்டல் அணி பார்ட்மேன் மற்றும் நூர் அகமத்தின் துல்லியமான பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களே எடுத்ததால், 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெக்சாஸ் அணி வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக டி காக் 26 (19) ஓட்டங்களும், கீமோ பவுல் 25 (17) ஓட்டங்களும் எடுத்தனர். பார்ட்மேன் 3 விக்கெட்டுகளும், நூர் அகமது மற்றும் சாவேஜ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Despite a fantastic start with the ball ? the Seattle Orcas were unable to chase down the Texas Super Kings in the final match of the regular season ⬇️
— Major League Cricket (@MLCricket) July 24, 2024
Well done to the Seattle Orcas for a great season! ? #MLC2024 | #SOvTSK | #T20 | #CognizantMajorLeagueCricket pic.twitter.com/7L8cblnDVd
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |