தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் - யாருக்கெல்லாம் கிடைக்கும்?
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தவெக அறிவித்தது.
தற்போது தவெக அரசு அமைந்துள்ள நிலையில், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவதற்கான குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ளது.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்
இதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.
இருப்பினும், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகளும் இந்த திட்டத்தில் பயன் பெறுவார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |