தாய்லாந்து குகையில் சிக்கி மரணத்தை வென்ற சிறுவன்... பிரித்தானியாவில் நேர்ந்த துயரம்
தாய்லாந்தில் வெள்ளப்பெருக்கின் போது குகைக்குள் சிக்கி உலக மக்களின் கவனத்தை ஈர்த்த சிறுவன், ஐந்தாண்டுகளுக்கு பின்னர் பிரித்தானியாவில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குகையில் சிக்கி உயிருக்கு போராடிய
தாய்லாந்தின் Tham Luang குகையில் சிக்கி உயிருக்கு போராடிய 12 இளம் கால்பந்து வீரர்களில் Duangpetch Promthep என்பவரும் ஒருவர். 2018ல் நடந்த இச்சம்பவத்தில், அந்த குகை வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொள்ள, சுமார் 2 வாரங்களுக்கும் மேல் Duangpetch Promthep உட்பட அந்த 12 இளம் கால்பந்து வீரர்களும் உயிருக்கு போராடினர்.
@Shutterstock
இறுதியில் உலக அளவில் கவனத்தை ஈர்த்த, மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அந்த சிறுவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 18 வயதேயான Duangpetch Promthep எப்படி இறந்தார் என்பதில் இதுவரை உறுதியான தகவல் இல்லை என்றாலும், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கனவு நிறைவேறும் தருணம்
2022 இறுதியில் Leicester-ல் அமைந்துள்ள Brooke House கல்லூரி கால்பந்து அகாடமியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தமது கனவு நிறைவேறும் தருணம் இது, இங்கிலாந்தில் கால்பந்து விளையாட்டை கற்றுக்கொள்ளும் மாணவனாக செல்கிறேன் என Duangpetch Promthep அப்போது குறிப்பிட்டிருந்தார்.
மட்டுமின்றி, தமக்கு இந்த வாய்ப்பளித்த Brooke House கல்லூரி கால்பந்து அகாடமிக்கும் அவர் நன்றி கூறியிருந்தார். பின்னர் லண்டன் வாழ்க்கை தொடர்பிலும் கல்லூரி தொடர்பிலும் அவர் தொடர்ந்து சமூக ஊடகத்தில் பதிவு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் Duangpetch Promthep-ன் தாயாரே, தமது மகன் இறந்த தகவலை தங்கள் சமூக மக்களுக்கு தெரிவித்துள்ளார்.