வீட்டிலேயே எளிமையான முறையில் தாய் சிக்கன் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் சிக்கன் ஃபிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் தாய் சிக்கன் ஃபிரைடு ரைஸ் என்றால் மவசு அதிகம். அதை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கனை ஊறவைக்க
எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
உப்பு
மிளகு தூள்
சாஸ் கலவை செய்ய
ஒய்ஸ்டெர் சாஸ் - 3 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
மீன் சாஸ் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
தாய் சிக்கன் ஃப்ரைடு ரைஸ் செய்ய
- ஜாஸ்மின் ரைஸ் - 1 கிண்ணம்
- சாஸ் கலவை
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
- பூண்டு - 1 தேக்கரண்டி நறுக்கியது
- இஞ்சி - 1 தேக்கரண்டி நறுக்கியது
- வெங்காயம் - 1.நறுக்கியது
- சிவப்பு மிளகாய் - 2 நறுக்கியது
- உப்பு, மிளகு தூள்
- முட்டை - 4
- பேசின் இலை
- வெங்காயத்தாள் வெங்காயம் நறுக்கியது
- வெங்காயத்தாள் கீரை நறுக்கியது

செய்முறை
1. ஒரு பெரிய பாத்திரத்தில் எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
2. உப்பு, மிளகு தூள் மற்றும் சோயா சாஸ் சேர்க்கவும். நன்றாக கலந்து 10 நிமிடம் தனியாக வைக்கவும்.
3. மற்றொரு பாத்திரத்தில், ஒய்ஸ்டெர் சாஸ், சோயா சாஸ், மீன் சாஸ் மற்றும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும். நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
4. ஒரு வாணலியை எடுத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றவும்.
5. நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி வெங்காயத் துண்டுகளைச் சேர்க்கவும்.
6. அடுத்து சிவப்பு மிளகாய் சேர்த்து வெங்காயத்தை வதக்கவும்.
7. இப்போது ஊறவைத்த சிக்கன் துண்டுகளைப் போட்டு, நன்றாக வேகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
8. சிறிது உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும். அனைத்தையும் கடாயில் ஒரு பக்கமாக நகர்த்தவும்.
9. வாணலியில் எண்ணெய் சேர்த்து, பின்னர் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றவும்.
10. சிறிது நேரம் சமைக்கவும், பின்னர் சிக்கன் துண்டுகளுடன் சேர்த்து கலக்கவும்.
11. முட்டை மற்றும் சிக்கன் வெந்ததும், அதில் வேகவைத்த ஜாஸ்மின் ரைஸ் சேர்க்கவும்.
12. பிறகு தயார் செய்த சாஸ் கலவையை ஊற்றவும். எல்லாவற்றையும் விரைவாகக் கலக்கவும்.
13. பேசின் இலைகள், நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம் மற்றும் நறுக்கிய வெங்காயத்தாள் கீரை சேர்க்கவும்.
14. நன்றாக கலந்து அடுப்பை அணைக்கவும்.
15. ஒரு சிறிய கடாயில், எண்ணெய் சேர்த்து முட்டை ஊற்றி. சிறிது உப்பு மற்றும் மிளகு தூவி, இருபுறமும் சமைக்கவும்.
16. இப்போது தாய் ஃபிரைடு ரைஸை பரிமாறும் தட்டுக்கு மாற்றி, பின்னர் பொரித்த முட்டையால் அலங்கரிக்கவும். சூடாக பரிமாறவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |