இந்திய மக்களுக்கு அடித்த அதிஷ்டம் - தாய்லாந்து அறிவித்துள்ள புதிய திட்டம்
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை காலவரையின்றி நீட்டிப்பதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.
இந்திய மக்களுக்கு அடித்த அதிஷ்டம்
முதலில் நவம்பர் 11, 2024 இல் முடிவடைய இருந்தது. இந்த கொள்கையானது இப்போது இந்திய பார்வையாளர்கள் தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் தங்கி மகிழலாம், மேலும் உள்ளூர் குடியேற்ற அலுவலகங்கள் மூலம் அதை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அதிக இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும், தாய்லாந்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தின் பிரபலமான இடங்கள் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானதாக அமைகிறது.
மலிவு விலை, நட்பு உள்ளூர்வாசிகள் மற்றும் பரந்த அளவிலான இடங்கள் ஆகியவற்றுடன், தாய்லாந்து இப்போது இந்தியப் பயணிகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான இடமாக உள்ளது.
இந்த நீட்டிக்கப்பட்ட விசா இல்லாத கொள்கை இந்திய சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தின் கலாச்சாரம், உணவு மற்றும் இயற்கை அழகை மிக எளிதாக அனுபவிக்க அனுமதிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |