1 அறைக்கு இரண்டு பேர்…8 மனைவிகளுடன் உல்லாசமாக வாழும் தாய்லாந்து இளைஞர்
தாய்லாந்தை சேர்ந்த ஓங் டாம் சொரோட் என்ற இளைஞர் 8 மனைவிகளை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அசத்தும் தாய்லாந்து இளைஞர்
தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு மனைவியை திருமணம் செய்து கொள்ளவே இளைஞர்கள் திணறி வரும் நிலையில் தாய்லாந்தை சேர்ந்த ஓங் டாம் சொரோட் என்ற இளைஞர் 8 மனைவிகளை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
ஓங் டாம் சொரோட் தாய்லாந்தில் பாரம்பரிய முறைப்படி போடப்படும் ஒரு வகை டாட்டு கலைஞராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது முதல் மனைவி நோங் ஸ்ப்ரைட்டை நண்பர் ஒருவரின் திருமணத்தில் சந்தித்ததாகவும், இருவருக்கும் பார்த்தவுடன் காதல் ஏற்படவே விரைவாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து இரண்டாவது மனைவி நோங் எல்-லை மார்கெட்டிலும், மூன்றாவது மனைவி நோங் நானை மருத்துவமனையிலும் சந்தித்துள்ளார். 4வது, 5வது மற்றும் 6வது மனைவிகளை இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக்டாக் தளங்களில் சந்தித்துள்ளார்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் எட்டாவது மனைவியான நோங் மாய்-யை தனது நான்கு மனைவிகளுடன் சுற்றுலா சென்று இருக்கும் இடத்தில் சந்தித்துள்ளார்.
இரண்டு மனைவிகளுக்கு ஒரு பெட் ரூம்
8 மனைவிகளுடனும் சமமான நேரத்தை செலவிடுவதற்காக ஒரு ரூமிற்கு இரண்டு மனைவிகள் தங்குகிறார்கள்.
தற்போது இரண்டு மனைவிகள் கர்ப்பமாக இருப்பதால் மற்ற 6 மனைவிகள் ஷெட்யூல் போட்டு கணவருடன் வாழ்ந்து வருகின்றனர்.