உங்கள் விடுமுறை நாட்களை இனிமையானதாக மாற்ற தாய்லாந்தே சிறந்த தெரிவு!
விடுமுறை நாட்கள் என்றாலே சுற்றுலாத் தளத்துக்கு எங்கு செல்லலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருப்போம். இந்நிலையில் அதற்கு சிறந்த தெரிவாக காணப்படுவது தாய்லாந்து.
ஏனென்றால் இங்கு இயற்கை அழகு நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பலரும் தாய்லாந்து ஒரு சொர்க்கம் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் இங்கே எல்லா வித பருவ சூழ்நிலைகளும் காணப்படுகின்றதாம்.
இதைத்தவிர சுற்றுலா தளங்கள், மலைக்காடுகள், கடற்கரைகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் போன்ற 200க்கும் மேற்பட்ட தீவுகள் இங்கு காணப்படுகின்றன. சரி இனி தாய்லாந்தின் சிறப்புமிக்க இடங்களைப் பற்றிப் பார்ப்போம்.
phimai historical park
இந்த இடமானது வரலாற்று சிறப்புமிக்க ஒரு தலமாக பார்க்கப்படுகின்றது. இங்கு கெமர் கோவில்கள் காணப்படுகின்றன. அதாவது புத்த விகாரைகளைப் போல எழுப்பப்பட்ட இந்து கோவில்கள் இங்கு காணப்படுகின்றன. இந்த இடமானது அந்த நாட்டு அரசால் பாதுகாப்பாக போற்றி வைக்கப்பட்டுள்ளது.
Bangkok
இது தாய்லாந்தின் தலைநகரமாகும். வேடிக்கை பார்ப்பதற்கும் பொருட்களை வாங்குவதற்கும் சிறந்த ஒரு இடமாக இது காணப்படுகிறது. இங்கே பூங்காக்கள், சந்தைகள், ஷாப்பிங் மால்கள், மசாஜ் பார்லர், கோவில்கள் போன்ற பல இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம். நண்பர்களுடன் சேர்ந்து இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கு இதுவொரு சிறந்த சுற்றலா தலமாக இருக்கும்.
Krabi
இந்த இடமானது, அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு தீவாக காணப்படுகிறது. இங்கே நீர்வீழ்ச்சிகள், குகைகள், அருவிகள் போன்ற இயற்கை அழகை அதிகமாக கொண்ட ஒரு இடமாகக் காணப்படுகிறது. புதிதாக திருமணம் முடித்த தம்பதிகளுக்கு இது ஒரு சிறந்த இடமாகக் காணப்படும்.
Erawan waterfall
இந்த அருவியானது மிகவும் அழகு நிறைந்த ஒன்றாகக் காணப்படுகிறது. இந்த அருவியின் பெயருக்கு பின்னால் ஒரு கதையுள்ளது. அதாவது, பண்டைய காலத்து புராணங்களில் இந்திரனின் வாகனமான மூன்று தலைகொண்ட யானையான, ஐராவனை நினைவுகூறும் விதமான இந்த இடத்திற்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாம்.
Koh kood
இங்கே பல்வேறு விதமான உயிரினங்கள், காடுகள், தாவரங்கள், காடுகள் போன்றன உள்ளன. இங்கே வெள்ளை நிற கடற்கரை மணல் காணப்படுகின்றது. தனியாக இருக்க வேண்டுமென்று விரும்புபவர்களுக்கு இது மிகவும் அருமையான ஒரு இடம்.
sukhothai historical park
இது மிகவும் பிரசித்தமான ஒரு இடமாகக் காணப்படுகின்றது. இந்த இடமானது 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த sukhothai பேரரசுக்கு தலைநகராக இருந்த இடமாகும். தாய்லாந்து செல்பவர்கள் நிச்சயமாக இந்த இடத்தை பார்க்க வேண்டும்.
Khao yai national park
தாய்லாந்துக்கு சுற்றுலா பயணம் செல்பவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடத்தில் இதுவும் ஒன்று. இந்த பூங்காவானது, 300 வகையான பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சரணாலயமாக விளங்குகிறது.