ஒருநாள் போட்டியில் 6 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தி மிரட்டல்!
தாய்லாந்து கிரிக்கெட் அணி வீராங்கனை திபட்சா புத்தவோங், 6 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
தாய்லாந்து கேப்டன் அரைசதம்
ஜிம்பாப்வே மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி 19ஆம் திகதி நடந்தது.
இதில் தாய்லாந்து அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய தாய்லாந்து 154 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கேப்டன் சைவாய் 57 ஓட்டங்களும், பூச்சதம் 25 ஓட்டங்களும் எடுத்தனர்.
ACC
மிரட்டலான பந்துவீச்சு
பின்னர் ஜிம்பாப்வே அணி 24.1 ஓவர்களுக்கு 76 ஓட்டங்களில் சுருண்டது. மிரட்டலாக பந்துவீசிய தாய்லாந்து அணி பந்துவீச்சாளர் திபட்சா புத்தவோங், 6 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை சாய்த்தார். மொத்தம் 6.1 ஓவர்கள் வீசிய அவர், அதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசினார்.
இதன்மூலம் 10 ஓட்டங்களுக்கு குறைவாக விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைகளில் மூன்றாவது இடத்தை அவர் பிடித்துள்ளார்.
icc-cricket