டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக புதிய வீரர் சேர்ப்பு!
டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செப்டம்பர் 8ம் திகதி அறிவித்தார்.
இதில், விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா , புவனேஸ்வர் குமார், முகமட் ஷமி ஆகியோர் அணியில் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று செப்டம்பர் 13ம் திகதி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அணி நிர்வாகத்துடன் கலந்துரையாடிய பிறகு அகில இந்திய மூத்த தேர்வுக்குழு ஷர்துல் தாக்கூரை 15 பேர் கொண்ட முக்கிய அணியில் சேர்த்துள்ளது.
15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றிருந்த ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேல் இப்போது காத்திருப்பு வீரர்களின் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது
ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின் , ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
காத்திருப்பு வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், அக்சர் படேல்.
அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், லுக்மான் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கரன் சர்மா, ஷாபாஸ் அகமது மற்றும் கே.கௌதம் ஆகியோர் துபாயில் உள்ள இந்திய அணி பயோ பபுளில் சேர்ந்து பயிற்சிக்கு உதவுவார்கள் என பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
? NEWS ?: Shardul Thakur replaces Axar Patel in #TeamIndia's World Cup squad. #T20WorldCup
— BCCI (@BCCI) October 13, 2021
More Details ?