''குறி வச்சா இரை விழனும்'' - வெளியான தலைவர் 170 டீசர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170 -வது திரைப்படத்தின் டைட்டிலுடன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
வெளியான தலைவர் 170 டீசர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெய் பீம் படம் இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கி வரும் தலைவர் 170 டீசர் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் உடன் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளார்.
இதையடுத்து தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |