விஜயின் கடைசி படத்தில் அவருடன் நடிக்கப்போவது யார் யார்? முழு தகவல்
30 வருடங்களாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்.
விஜய் நடிப்பில் கடைசியாக கடந்த 5 ஆம் திகதி தி கோட் படம் வெளியாகியது. இதனையடுத்து தனது கடைசி படத்தில் நடிக்க இருக்கிறார்.
தளபதி 69 என மக்களால் அழைக்கப்படும் விஜயின் கடைசி படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருப்பதை தொடர்ந்து படம் குறித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய், இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்பதும், ஹெச்.வினோத் இப்படத்தை இயக்குகிறார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
விஜயுடன் கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ உள்ளிட்ட விஜய் படங்களுக்கு இசையமைத்த அனிருத் தான் தற்போது தளபதி 69 படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார்.
அதேபோல், தளபதி 69 படத்தில், ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த மோகன்லால் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்க இருக்கிறாராம்.
பிரேமலு பட நடிகை மமிதா பைஜூ தளபதி 69 படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
கதாநாயகியாக விஜய்யுடன் ஏற்கனவே 3 படங்களில் ஜோடியாக நடித்தவர், சமந்தா. இவர்தான், தளபதி 69 படத்திலும் அவருக்கு ஜோடி என்று கூறப்படுகிறது.
தளபதி 69 படம், 200% விஜய்யின் படமாகதான் இருக்கும் என, அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் முன்னரே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படம், பக்கா கமர்ஷியல் கதையாக இருக்கும் எனவும், காதல்-ட்ராமா-அரசியல் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |