தமிழுக்காக பல மில்லியன் டொலர்கள் அளித்த கனடா! நெஞ்சை பேருவகைக் கொள்ளச் செய்திருப்பதாக சீமான் நெகிழ்ச்சி!

tamil canada seeman
By Basu Jul 24, 2021 05:14 AM GMT
Report

‘தமிழ்ச் சமூக மையம்’ அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா ஒன்றிய அரசிற்கும், ஒன்டாரியோ மாநில அரசிற்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா நாட்டின் ஒன்டாரியோ மாநிலத்தில் ‘தமிழ்ச் சமூக மையம்’ அமைப்பதற்காகக் கனடா ஒன்றிய அரசும், ஒன்டாரியோ மாநில அரசும் இணைந்து 26.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளித்திருப்பது உள்ளபடியே நெஞ்சை பேருவகைக் கொள்ளச் செய்திருக்கிறது.

தன்னை நாடிவந்த தமிழ் மக்களை அள்ளி அரவணைத்து ஆதரித்ததோடு, அவர்களின் கடந்த காலத் துயர்மிகுந்த காயங்களை ஆற்றி இன்னொரு தாய்மடியாகவே திகழ்கிறது கனடா நாடு. அதேபோல் தங்களை வாழ்வித்த கனடா நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அயராது உழைத்தவர்கள் தமிழ் மக்கள். அப்படி உண்மையும் நேர்மையுமாக நாற்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக அரும்பாடுபட்ட தமிழ் இனத்தைச் சிறப்பிக்கும் வகையிலேயே கனடா தேசம், இத்தகைய சிறப்புமிக்க ‘தமிழ்ச் சமூக மையத்தை’ அமைப்பதற்கு முன்வந்திருப்பதாகக் கருதுகிறேன்.

புதிதாக அமையவிருக்கும் தமிழ் சமூக மையத்தில் பல்நோக்கு வசதிகொண்ட அருங்காட்சியகம், கலையரங்கம், வெளிவிளையாட்டரங்கம், நூலகம், பண்பாட்டுக் கூடம், மனநலசேவைகள், முதியோருக்கான மகிழ்விடம், மற்றும் பலகல்வி பொழுதுபோக்கு இடங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருப்பது மேலும் சிறப்புடையதாகும்.

தமிழர் பண்பாட்டு மாதம் மற்றும் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் எனத் தமிழர்களின் மொழி, கலை, இலக்கிய, பண்பாடு மற்றும் தாயக விடுதலைப் போராட்டத்தைப் போற்றும் வகையில் கனடா நாட்டு அரசும், ஒன்டாரியோ மாநில அரசும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் பல்வேறு சிறப்புமிக்க நடவடிக்கைகளில் மற்றுமொரு மைல்கல்லாக, தற்போது அமையவிருக்கும் தமிழ்ச் சமூக மையம் திகழும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. புலம்பெயர்ந்து வந்தபோதிலும், கனடா மண்ணின் அரசியலோடு இயைந்து வாழும் அனைத்து குடிமக்களையும் சமமாகக் கருதி அவர்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றித் தருவதோடு மட்டுமல்லாமல், தன் நாட்டில் வாழும் தனித்த தேசிய இனங்களின் பண்பாட்டுக் கூறுகளையும் போற்றிப்பாதுகாக்க முன்வந்திருக்கும் கனடா நாட்டு அரசின் உயரிய நோக்கம் என்றும் பாராட்டுக்குரியது.

இத்தகைய பெருமைமிகு தமிழ்ச் சமூக மையத்தை அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா ஒன்றிய அரசிற்கும், ஒன்டாரியோ மாநில அரசிற்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதோடு, தமிழ்ச் சமூக மையம் அமைவதற்கு முயற்சியெடுத்த ஒவ்வொரு தமிழ் உறவுகளுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வென்றாக வேண்டும் தமிழ்! ஒன்றாக வேண்டும் தமிழர்! என சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US