ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா
முல்லைத்தீவு மாவட்டத்தின் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா சிறப்புற நிறைவேறியது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 18.06.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வேட்டைத்திருவிழா, சப்பரதிருவிழா என 15 நாட்கள் உற்சவங்கள் சிறப்புற இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய 15 ஆவது நாளான நேற்று (02.07.2023) தேர்த்திருவிழா சிறப்புற நடைபெற்றுள்ளது.
நண்பகல் 12.00 மணியளவில் கொடிக்கம்ப அபிசேகங்கள் இடம்பெற்று தொடர்ந்து வசந்தமண்டப பூசை இடம்பெற்று வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த பூலோகநாயகி சமேத வேகாவனேஸ்வரர், வள்ளிதெய்வானை உடன் முருகப்பெருமான், பிள்ளையார் ஆகியோர் எழுந்தருளி உள்வீதி வலம் வந்து மாலை 3.00 மணியளவில் தேரில் அமர்ந்து மக்களுக்கு அருள் பாலித்தனர்.
பெருமளவிலான பக்தர் கூட்டம்
இதன்போது பக்தர்கள் தீச்சட்டி, காவடி, தூக்கு காவடி என எடுத்து நேர்த்தி கடன்களை நிறைவு செய்துள்ளார்கள்.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கடந்த மாதம் 108 அடி உயரம் கொண்ட நவதள இராஜகோபுரம் சிறப்பாக அமைக்கப்பட்டு கும்பாபிசேகம் நடைபெற்றுள்ளது.
ஆலய திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்றதுடன் இன்று (03.07.2023) தீர்த்தத்திருவிழாவுடன் ஆண்டு திருவிழாக்கள் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |