எதிரணியை புரட்டியெடுத்த ஜாம்பவான்களான தரங்கா மற்றும் தில்ஷன்! அபார வெற்றியுடன் முதலிடத்தை பிடித்த இலங்கை அணி
சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் வங்கதேச ஜாம்பவான்கள் அணியை வீழ்த்தியதன் மூலம் இலங்கை ஜாம்பவான்கள் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், வங்கதேசம், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச ஜாம்பவான்கள் அணியும், இலங்கை ஜாம்பவான்கள் அணியும் மோதின.
இப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது.
Match Day: Sri Lanka Legends Vs Bangladesh Legends #SLLvsBANL#UnacademyRoadSafetyWorldSeries pic.twitter.com/MmmlLXsem8
— Road Safety World Series (@RSWorldSeries) March 10, 2021
இலங்கை அணிசார்பில் உபுல் தரங்கா 47 பந்துகளை எதிர்கொண்டு, 5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கலாக 99 ரன்களை ஆட்டமிழக்காது பெற்றார்.
தில்ஷன் 23 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடங்கலாக 33 ரன்களையும், சாமர சில்வா 24 ரன்களையும் எடுத்தனர். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது.
ஆனால் இலங்கை பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்ஷன் 3 விக்கெட்டுகளையும், தம்மிக பிரஷாத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை முதலிடத்தில் உள்ளது.
#SLLvsBANL
— Road Safety World Series (@RSWorldSeries) March 10, 2021
A hard fought victory for #SriLankaLegends after a rusty start.
We also acknowledge the valiant performance by the #BangladeshLegends.?
Watch LIVE only on @Colors_Cineplex, #RishteyCineplex and for free on @justvoot pic.twitter.com/Ckx84YWm5y