54 பந்தில் 102 ரன் விளாசிய உபுல் தரங்கா! அவுஸ்திரேலியாவை நொறுக்கிய இலங்கை மாஸ்டர்ஸ்
அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் வீழ்த்தியது.
ஷான் மார்ஷ் 77
வதோதராவில் நேற்று நடந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 217 ஓட்டங்கள் குவித்தது. ஷான் மார்ஷ் 77 (49) ஓட்டங்களும், பென் டன்க் 56 (29) ஓட்டங்களும் விளாசினர்.
𝐃𝐮𝐧𝐤 It Out of the Park! 💥
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) February 28, 2025
Ben Dunk brings up a fiery 5️⃣0️⃣ in style – with a massive six! 🚀#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/pVWVTw0nyd
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் சங்ககாரா 2 ஓட்டங்களில் வெளியேற, உபுல் தரங்கா மற்றும் லஹிரு திரிமன்னே கூட்டணி அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.
உபுல் தரங்கா சதம்
தரங்கா சிக்ஸர் மழை பொழிந்து ருத்ர தாண்டவம் ஆடினார். மறுபுறம் திரிமன்னேவும் அதிரடியாக அரைசதம் விளாசினார். 34 பந்துகளை எதிர்கொண்ட திரிமன்னே 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் எடுத்தது ஆட்டமிழந்தார்.
𝐓𝐡𝐚-𝐧𝐝𝐞𝐫-𝐫𝐚𝐧𝐠𝐚! ⚡
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) February 28, 2025
A knock filled with 𝐂𝐥𝐚𝐬𝐬 𝐚𝐧𝐝 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫𝐢𝐭𝐲 - relive his brilliant ton here! 🏏#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/QflyM3XUQE
உபுல் தரங்கா (Upul Tharanga) மற்றும் லஹிரு திரிமன்னே (Lahiru Thirimanne) கூட்டணி 153 ஓட்டங்கள் குவித்தது. அசேல குணரத்னே 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தரங்கா சதம் விளாசினார். அவர் 54 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் உதானா (15), சீக்குகே (16) அதிரடி காட்ட இலங்கை அணி 19.2 ஓவரில் 222 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
𝐂𝐥𝐮𝐭𝐜𝐡 𝐏𝐞𝐫𝐟𝐨𝐫𝐦𝐚𝐧𝐜𝐞! 💪
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) February 28, 2025
The #SriLankaMasters on a 𝐑𝐎𝐋𝐋! 🔥 Bouncing back strong with 2️⃣ consecutive wins and gaining momentum! 💪#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/gfAuq3xcJh
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |