இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு அறிவிப்பு! முன்னாள் அதிரடி வீரர் தலைவராக நியமனம்
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான விமர்சனங்கள்
உலகக்கோப்பை தொடரில் மோசமான செயல்பாட்டினால் இலங்கை அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
அதன் விளைவாக தேர்வுக்குழு தலைவர் நீக்கம் உட்பட பல மாற்றங்கள் ஏற்பட்டு கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்த நிலையில் இரண்டு ஆண்களுக்கு மட்டும் தேசிய அணியை தெரிவு செய்யும் அதிகாரத்துடன் புதிய தேர்வுக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Sri Lanka Cricket wishes to announce a new ‘Cricket Selection Committee’ for a period of
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) December 13, 2023
two years to select national teams.
The appointment of the new committee, which comes into immediate effect, was made by the
Honorable Minister of Sports and Youth Affairs, Harin Fernando. pic.twitter.com/CvHgeYX5LO
உபுல் தரங்கா
இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட், 'விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) புதிய தேர்வுக்குழுவை உடனடியாக அமைத்துள்ளார்' என தெரிவித்துள்ளது.
மீண்டும் களத்தில் இறங்கி இங்கிலாந்தை சூறையாடிய ஆந்த்ரே ரசல்! முதல் டி20 வெஸ்ட் இண்டீஸ் மிரட்டல் வெற்றி
இந்த புதிய தேர்வுக்குழுவின் தலைவராக முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் உபுல் தரங்கா (Upul Tharanga) நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக அஜந்தா மெண்டிஸ் (Ajantha Mendis), இண்டிகா டி சரம் (Indika De Saram), தரங்கா பரணவிதான (Tharanga Paranavitana), டில்ருவன் பெரேரா (Dilruwan Perera) ஆகியோர் செயல்பட உள்ளனர்.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |