இந்த படத்தில் நடித்தது என் வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு- நடிகை நயன்தாரா
அந்த படத்தில் நடித்தது வாழ்க்கையில் நான் எடுத்த மோசமான முடிவு என்று நயன்தாரா கூறியுள்ளார்.
நடிகை நயன்தாரா
தமிழில் ''ஜயா'' படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இரண்டாவது படமே அவருக்கு நடிகர் ரஜினிகாந்துடன் ''சந்திரமுகி'' யில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதற்கடுத்தடுத்த படங்களின் வெற்றி காரணமாக நயன்தாரா தொடர்ந்து தமிழில் இருபது வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
தற்போது உலகெங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டு லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா.
இந்நிலையில், கஜினி படத்தில் நடித்தது குறித்து நயன்தாரா பேசிய விடயம் ஒன்று வைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது..,
நயன்தாரா கூறுகையில், "கஜினி படத்தில் நடித்தது தான் எனது வாழ்க்கையில் நான் எடுத்த மோசமான முடிவு.
கதாபாத்திரம் குறித்து என்னிடம் சொல்லப்பட்டது போல அவர்கள் காட்சிப்டுத்தவில்லை. சில இடங்களில் நான் மோசமாக சித்தரிக்கப்பட்டேன்.
இதைப்பற்றி நான் புகார் கூற விரும்பவில்லை, இதை நான் என் வாழ்க்கையில் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |