அது மிகச் சிறந்த செய்தி: உக்ரைன் போர் தொடர்பில் மேக்ரான் தெரிவித்துள்ள கருத்து
ட்ரம்பால் உண்மையாகவே உக்ரைன் போரை நிறுத்த புடினை சம்மதிக்க வைக்க முடியும் என்றால், அது மிகச் சிறந்த செய்தியாக இருக்கும் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி.
மேக்ரான் தெரிவித்துள்ள கருத்து
I just spoke with President @ZelenskyyUa.
— Emmanuel Macron (@EmmanuelMacron) February 14, 2025
If President @realDonaldTrump can truly convince President Putin to stop the aggression against Ukraine, that is great news.
Then, it will be the Ukrainians alone who can drive the discussions for a solid and lasting peace.…
நான் இப்போதுதான் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் பேசினேன்.
உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடினை உண்மையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பால் சம்மதிக்கவைக்க முடிந்தால், அது ஒரு மிகச் சிறந்த செய்தி.
அதன்பின், ஒரு உறுதியான மற்றும் நீடித்த அமைதிக்கான விவாதங்களை நடத்த உக்ரைனியர்களால் மட்டுமே முடியும்.
அவர்களுடைய இந்த முயற்சியில் நாங்கள் அவர்களுக்கு உதவுவோம் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
I had a productive conversation with French President @EmmanuelMacron. I informed him about today’s meeting with U.S. Vice President J.D. Vance and my recent phone call with President Trump.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) February 14, 2025
We must develop a joint strategy with the U.S. and Europe to bring about a just peace…
அதேபோல, உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், தான் மேக்ரானுடன் பயனுள்ள ஒரு உரையாடலை மேற்கொண்டதாகவும், நியாயமான அமைதிக்காக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைந்து திட்டம் ஒன்றை உருவாக்குவதன் அவசியம் குறித்து தான் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |