பிரெஞ்சு நகரம் ஒன்றில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் வீடில்லாதவர்களுக்கும் வீடும் வேலையும் வழங்கும் ஒரு திட்டம்
வாவ், கடைசியாக எனக்கும் ஒரு வீடு கிடைத்துவிட்டது என மகிழ்கிறார் Pascal (52).
ஆம், நிலையான வேலையில்லாத Pascalக்கு இப்போது சின்னதாக ஒரு நகரும் வீடு கிடைத்திருக்கிறது.
அதில் Pascalக்கு கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், அந்த வீட்டைக் கட்டுவதில் அவரும் பங்கேற்றிருக்கிறார் என்பதுதான்...
விடயம் என்னவென்றால், பிரான்சின் பிரிட்டனியிலுள்ள AMISEP என்னும் சமூக சேவை அமைப்பு, வீடில்லாதவர்கள், புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆகியோருக்கு நகரும் வீடுகளை வழங்கி வருகிறது.
ஆனால், அந்த வீடுகளை கட்டுவதில் அவர்களும் உதவி செய்யவேண்டும். அப்படிச் செய்வது அவர்களுக்கும் நல்லதுதான். காரணம், அவர்கள் தங்கள் வீட்டைக் கட்டும்போதே ஒரு கைத்தொழிலையும் கற்றுக் கொள்கிறார்கள். ஆக, அவர்களுக்கு வீடு கிடைப்பதுடன், எதிர்காலத்தில் வேலை செய்வதற்கான பயிற்சியும் கிடைக்கிறது.
வீடற்றவர்களும், தங்களுக்கு ஒரு வீடு கிடைக்கிறது என்ற மகிழ்ச்சி மட்டுமின்றி, தங்களை அந்த வீடு கட்டும் வேலை பிஸியாகவும் வைக்கிறது என்பதால் மகிழ்ச்சியுடன் தங்களுக்கான வீடுகளைக் கட்டி வருகிறார்கள்.