'அவ்வளவு தான் கொடுக்க முடியும்' ஊதிய உயர்வு குறித்து போரிஸ் ஜான்சன் திட்டவட்டம்
குறைந்த ஊதிய உயர்வுக்கு எதிரான கண்டணங்கள் மற்றும் வேலை நிறுத்தத்திற்காண எச்சரிக்கைக்கு மத்தியில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசால் தற்போது அவ்வளவு தான் கொடுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசு NHS ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 1% ஊதிய உறவு அளிப்பதாக அறிவித்தது. ஆனால், கடந்த ஆண்டு 2.1% ஊதிய உயர்வு அளிப்பதாக உறுதியளித்திருந்தது.
இதனால், மிகுந்த கோபமடைந்த செவிலியர்கள் உள்ளிட்ட NHS ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் மூலமாக கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், 1% ஊதிய உயர்வை மாரு பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், வேலைநிறுத்த போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றுநோய்க்கான நடவடிக்கைகளுக்கு மத்தியில் அரசாங்கத்தால் அதிக சம்பள உயர்வு கொடுக்க முடியாது, "அரசு முடிந்தவரை NHS ஊழியர்களுக்கு கொடுக்க முரசித்துள்ளது" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், குறைந்த ஊதிய உயர்வுக்கு ரதிர்ப்பு தெரிவித்து நேற்று சமூக இடைவெளளி கடைப்பிடிக்கப்பட்ட போராட்டம் நடைபெற்றது.
மரச்செஸ்டரில் நடந்த இந்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு, கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக 10,000 யூரோ அபராதம் விவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.