என் வாழ்வில் பயங்கரமான ஆண்டு அதுதான்: மறைந்த பிரித்தானிய மகாராணியாரை கலங்கடித்த சம்பவங்கள்...
பிரித்தானிய மகாராணியார் நேற்று இயற்கை எய்திவிட்டார்.
தனது வாழ்வில் சந்தித்த மோசமான ஆண்டு 1992ஆம் ஆண்டு என கூறியிருந்தார் அவர்.
என் வாழ்வை நான் திரும்பிப் பார்க்கும்போது, மகிழ்ச்சியில்லாத ஒரு ஆண்டாக அமைந்தது 1992ஆம் ஆண்டுதான் என்று கூறியுள்ளார் மறைந்த பிரித்தானிய மகாராணியார்.
அந்த ஆண்டு, நவம்பர் மாதம் 15ஆம் திகதி, தான் பிரித்தானியாவின் மகாராணியாக பொறுப்பேற்று 40 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடுவதற்காக கூடியிருந்த விருந்தினர்கள் மத்தியில், அந்த வார்த்தைகளைக் கூறினார் மகாராணியார்.
என் மீது அதிக கரிசனம் கொண்ட ஒருவரின் வார்த்தைகளில் கூறினால், என் வாழ்வில் பயங்கரமான ஆண்டு அதுதான் என்று கூறியுள்ளார் மகாராணியார்.
அவர் சொன்னதைப் போலவே, அந்த ஆண்டு ஒரு துக்க செய்தியுடன் துவங்கியது, தொடர்ந்து கெட்ட செய்திகள் வந்துகொண்டே இருந்தன மகாராணியாருக்கு...
ஆண்டு துவங்கியதுமே, ஜனவரி மாதம், மகாராணியின் செல்ல மகனான ஆண்ட்ரூவும் அவரது மனைவி சாரா ஃபெர்குசனும் மகாராணியாரை சந்தித்து தங்கள் திருமண வாழ்வு முடிந்துபோனதாக தெரிவிக்க, அதிர்ந்துபோன மகாராணியார், உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய முடியுமா என சாராவிடம் கேட்டாராம்.
Image: Getty Images
அதன்படி தங்கள் பிரிவை ஆறு மாதங்கள் தள்ளிப்போட்டிருக்கிறார்கள் தம்பதியர். ஆனால், அதற்குள் சாரா அமெரிக்க பிளேபாயான Steve Wyatt, அமெரிக்க நிதி மேலாளரான John Bryan என பலருடன் உறவுவைத்திருந்ததாக தகவல் வெளியானது.
இதற்கிடையில் இளவரசர் சார்லஸ் டயானா பிரச்சினை பூதாகரமாகத் துவங்கியது. பிப்ரவரி மாதம் தன் கணவரை விட்டுவிட்டு டயானா மட்டும் காதலர்களின் நினைவுச்சின்னமாக கருதப்படும் இந்தியாவிலுள்ள தாஜ்மஹாலுக்குச் சென்று தன் திருமணத்தில் பிரச்சினை என்பதை சூசகமாக தெரிவித்தார்.
Image: MARTIN KEENE
ஏப்ரல் மாதம் இளவரசி ஆன் மற்றும் அவரது கணவரான மார்க் பிலிப்ஸின் விவாகரத்து முடிவானது.
ஆகத்து மாதம் இன்னும் பயங்கரமாக இருந்தது. அரை நிர்வாணமாக படுத்திருக்கும் சாராவின் கால்களை John Bryan முத்தமிடுவது முதலான காட்சிகள் செய்தித்தாள்களில் வெளியாக, அரண்மனை வட்டாரம் அதிர்ந்தது. மகாராணியார் வழக்கத்துக்கு மாறாக கடும் ஆத்திரம் அடைந்தார். அவரது கோபம் தன் அஸ்திபாரம் வரை ஆட்டம் காணவைத்தது என பின்னர் சாரா தெரிவித்திருந்தார்.
image - iconicphotos
அதே வார இறுதியில் மீண்டும் ஒரு மோசமான செய்தி வெளிவந்தது. இளவரசி டயானா, ஜேம்ஸ் கில்பி என்னும் தனது நண்பருடன் அந்தரங்கமாக கொஞ்சிப் பேசும் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகின.
நவம்பர் 13ஆம் திகதி மீண்டும் மீண்டும் ஒருமுறை ஒரு தொலைபேசி உரையாடல் வெளியானது. இம்முறை இளவரசர் சார்லஸ் தன் முன்னாள் காதலியான, திருமணமான கமீலா பார்க்கருடன் தவறான உறவு வைத்திருப்பது குறித்த தகவல் உறுதியானது.
CREDIT: Shutterstock
இப்படி தன் பிள்ளைகளின் வாழ்வில் மாறி மாறி சூறாவளி வீசிக்கொண்டிருந்ததைக் கண்டு மகாராணியார் கலங்கிப்போயிருந்த நிலைமையில்தான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது.
ஆம், 1992ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 20ஆம் திகதி, அன்று மகாராணியார் மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப்பின் 45ஆவது திருமண நாள் விழா, விண்ட்சர் மாளிகை பயங்கரமாக தீப்பற்றி எரியத் துவங்கியது.
CREDIT- thesun
அத்துடன் முடியவில்லை பிரச்சினைகள். அந்த ஆண்டின் இறுதி மாதம், டிசம்பர் 9 அன்று, பிரித்தானிய பிரதமரான ஜான் மேஜர், இளவரசர் சார்லசும், இளவரசி டயானாவும் பிரியப்போவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஆக, மகாராணியார் சொன்னதுபோலவே 1992ஆம் ஆண்டு அவரது வாழ்வில் மிக மோசமான காலகட்டமாகிவிட்டது!