இந்தியாவிற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி!
இந்தியாவிற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
எனினும் 4 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி 2 க்கு 1 என்ற ஆட்டக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸ்
கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியப் பிரதேசத்தின் இந்தோரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 109 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்றைய 2 ஆம் நாளில் தனது முதல் இன்னிங்ஸ்சை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 186 ஆவது ஓட்டத்தை பெற்றிருந்த போது ஐந்தாவது விக்கெட்டை பறிகொடுத்து.
தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய அணி இறுதியில் 197 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து.
உஸ்மன் ஹவாஜா 60 ஓட்டங்களையும் ஸ்ரிவன் ஸ்மித் 26 ஓட்டங்களையும் பெற்றதுடன், ரவீரந்திர ஜடேஜா 4 விக்கெட்டுக்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் உமேஸ் யாதேவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸ்சில்
இதனையடுத்து தனது 2 ஆவது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நேற்றைய 2 ஆம் நாள் ஆட்டநேர நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அதிகபட்சமாக செஸ்டிஸ்வர் புஜாரா 59 ஓட்டங்களையும் ஷெரியாஸ் ஐயர் 26 ஓட்டங்களையும் பெற்றதுடன், நெதன் லயன் 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இதன்பிரகாரம் இன்றைய 3 ஆம் நாளில் 76 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி தனது இரண்டாம் இன்னிங்ஸ்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 78 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
ட்ராவிஸ் ஹெட் 49 ஓட்டங்களையும் மர்னூஸ் லபுசேங் 28 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றதுடன், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றினர்.
போட்டியின் சிறப்பாட்டகாரராக நெதன் லயன் தெரிவுசெய்யப்பட்டார்.