தந்தை வைத்திருந்த போதைப்பொருளைத் திருடிய சிறுவன் செய்த செயல்
ஜேர்மனியில் தன் தந்தை வைத்திருந்த கஞ்சாவைத் திருடிய சிறுவன் ஒருவன், அதை தீவைத்துக் கொளுத்தினான்.
தெற்கு ஜேர்மனி மாகாணமான பவேரியாவில், 12 வயது சிறுவன் ஒருவன், தன் தந்தை கஞ்சா வைத்திருப்பதைக் கவனித்து, அதைத் திருடியுள்ளான்.
பிறகு, அவனும் அவனது நண்பர்கள் சிலருமாக சேர்ந்து அதை தீவைத்துக் கொளுத்தியுள்ளார்கள். அந்த தீயினால் உருவான புகையால் ஒரு சிறுவனுக்கு தலை சுற்றல் ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுமளவுக்கு நிலைமை மோசமாகவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார், அந்த பையனை அழைத்துக்கொண்டு அவனது வீட்டுக்குச் சென்றுள்ளார்கள். அங்கு அந்த பையனின் தந்தை போதைப்பொருள் அருந்தியுள்ளாரா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரிசோதனையில், அவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது தெரியவந்ததையடுத்து, அவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் கஞ்சா வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.