உல்லாசமாக இருக்கலாம்! ரூ.11 லட்சத்தை சுருட்டிய சீரியல் நடிகை கைது
கேரளாவில் முதியவரிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி ரூ.11 லட்சம் பணத்தை பறித்த பலே கில்லாடி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
முதியவரிடம் 11 லட்சம் பறித்த நடிகை
கேரளா, திருவனந்தபுரம், பட்டம் பகுதியை சேர்ந்த 75 வயது கொண்ட முன்னாள் ராணுவ வீரர். இவர் கேரள பல்கலைக்கழக ஊழியராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், கொல்லம், பரவூரில் உள்ள தன் வீட்டை வாடகைக்கு விட இருப்பதாக விளம்பரம் செய்தார்.
இதைப் பார்த்து ஒரு பெண் மே மாதம் இவருக்கு போன் செய்து பேசியுள்ளார். தனக்கு வீடு வாடகை வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதனையடுத்து,இந்த வயதான முதியவரும், அந்தப்பெண்ணும் இது தொடர்பாக பேசிக்கொண்டு வருகையில் நட்புடன் பழகி வந்துள்ளனர்.
பின்னர், அந்தப் பெண் அந்த முதியவரிடம் ஆசை வார்த்தை கூறி பேசியதால், அப்பெண் மீது முதியவர் ஆசை கொண்டுள்ளார்.
இதனையடுத்து, அந்தப் பெண் கொல்லம் பரவூரில் உள்ள வீட்டில் தனியாக சந்திக்க விரும்புவதாகவும், இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று அந்த முதியவரை அழைத்துள்ளார்.
அப்பெண்ணின் பேச்சில் மயங்கிய முதியவர் பெண்ணை தனியாக சந்திக்கச் சென்றார். அப்போது, அந்த பெண் முதியவரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தார்.
பின்னர், அச்சமயம் ஆண் நண்பர் ஒருவர் அங்கே வந்தார். இருவரும் அந்த முதியவரை மிரட்டினர். எங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வேண்டும். இந்த பணத்தை தாராவிட்டால் உன் போட்டோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
மடக்கிப் பிடித்த பொலிசார்
இதனால் பயந்து போன அந்த முதியவர் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வந்துவிட்டால் அவமானமாகிவிடும் என்று பயந்து ரூ.11 லட்சம் கொடுத்துள்ளார்.
அதை வாங்கிய அவர்கள் மீதம் பணம் கொடுக்காவிட்டால், புகைப்படத்தை வெளியே விட்டுவிடுவோம் என்று மிரட்டினர். இதன் பின்னர், யாருக்கும் தெரியாமல் முதியவர் காவல் நிலையத்திற்கு சென்று இச்சம்பவம் குறித்து புகார் கொடுத்தார்.
இதை வழக்குப் பதிவு செய்த பொலிசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது டி.வி. சீரியல் நடிகை நித்யா சசி மற்றும் பினு என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை பிடிக்க பொலிசார் திட்டமிட்டனர். முதியவரிடம் பணம் ரெடியாகிவிட்டதாகவும், வந்து வாங்கிக்கொள்ளுமாறும் நடிகை நித்யா சசி, பினுவை அழைத்துள்ளார். அவர்கள் இருவரும் வரவே, அவர்களை பொலிசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ரூ. 25 லட்சம் கேட்டு மிரட்டி மோசடி செய்த டிவி சீரியல் நடிகையால் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |