சச்சின் படத்தில் ஜெனிலியாவிற்கு வாய்ஸ் கொடுத்த நடிகை.., யார் தெரியுமா?
கோலிவுட் திரையுலகில், ரசிகர்களின் கவனம் ஈர்த்த ரொமாண்டிக் காமெடி படங்களுள் ஒன்று சச்சின்.
இந்த திரைப்படத்தில், விஜய் துருதுருவென இருக்கும் கல்லூரி மாணவராக நடித்திருப்பார்.
சச்சின் திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது.
இதனைத்தொடர்ந்து, சச்சின் படம் புனித வெள்ளியை முன்னிட்டு, நேற்று மறுபடியும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
திரையரங்குகளில் இந்த படத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த சச்சின் படத்தில் ஜெனிலியா வித்தியாசமாக க்யூட் ரோல் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் இருந்துதான், பலரும் ஜெனிலியாவின் ரசிகர்களாக மாற தொடங்கினர்.
விஜய்- ஜெனிலியா நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது.
இந்நிலையில், சச்சின் படத்தில் ஜெனிலியாவிற்கு வாய்ஸ் கொடுத்தவர் ஒரு பிரபல நடிகை என்பது பலருக்கும் தெரியாது.
அவரது பெயர், கனிகா. பல படங்களில் ஹீரோயினாகவும், இரண்டாவது ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.
கனிகா ஜெனிலியாவிற்கு மட்டுமல்ல இன்னும் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |