பிரதமர் போட்டியில் தோற்ற ரிஷியை கேலி செய்யும் விதத்தில் வெளியாகியுள்ள விளம்பரம்...
பிரதமர் போட்டியில் தோற்ற ரிஷியை கேலி செய்யும் விதத்தில் விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது
பொதுமக்கள் சிலர் அந்த விளம்பரத்து எதிராக கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அரசியல் கொடூரமானது... பதவியில் இருக்கும்வரை ஒருவரை போற்றும், அவரே பதவியிழந்தால் அவரைத் தூற்றும்...
இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்கும் அதற்கு தப்பவில்லை!
நேற்று வரை, பிரித்தானியாவின் அடுத்த பிரதமராவார் என கொண்டாடப்பட்ட ரிஷியை, வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று, அவமதிக்கும் அல்லது கேலி செய்யும் வகையில் ஒரு விடயத்தைச் செய்துள்ளது.
ஆம், CV Library என்ற பிரித்தானிய வேலைவாய்ப்பு நிறுவனம், ரிஷியின் படத்தை பெரிதாக போட்டு, அதன் பக்கத்தில், வேலை கிடைக்கவில்லையா, எங்களிடம் எல்லாருக்குமான வேலைகள் உள்ளன. அவற்றில் உங்களுக்கானதைத் தேர்வு செய்யுங்கள் என எழுதப்பட்ட விளம்பரப் பலகைகளை வாகனத்தில் ஏற்றி தெருத்தெருவாக சுற்றி வரச் செய்துள்ளது.
ஆனாலும், மக்கள் எல்லோரும் அதைப் பார்த்து சிரிக்கவில்லை...
அந்த விளம்பரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மக்கள், இது அவமரியாதையான செயல் என்று கூறி தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அந்த புகைப்படத்தில் இருப்பது ரிஷியாக இருந்தாலும் சரி, மார்கரட் தாட்சராக இருந்தாலும் சரி, அவர்கள் பொது வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதற்காக இப்படிச் செய்யலாமா?
சரி, உங்கள் பிள்ளை வேலை தேடிப்போன இடத்தில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம், அதைக் கேட்டு நாம் கேலி செய்து சிரிக்கவா செய்வோம்? என கேள்வி எழுப்பியுள்ளார் ஒருவர்.
விடயம் என்னவென்றால், அந்த வேலைவாய்ப்பு நிறுவனம் கேலி செய்யும் முதல் நபர் ரிஷி அல்ல!
பிரித்தானிய பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தபோதும், ராஜினாமா செய்துவிட்டீர்களா? எங்களிடம் எல்லாருக்குமான வேலைகள் உள்ளன. அவற்றில் உங்களுக்கானதைத் தேர்வு செய்யுங்கள் என்று கூறும் விளம்பரம் ஒன்றை CV Library நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.