இந்த ஆண்டிற்கான சிறந்த 5G ஸ்மார்ட்போன்கள் இது தான்! வெளியான பட்டியல்-விலை விவரம்
வேகமாக வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான காலத்தில், நாம் பயன்படுத்தும் போன்களின் வேகமும் காலத்திற்கு காலம் கூடிக் கொண்டே தான் போகிறது.
ஆரம்ப காலகட்டத்தில் சாதரண போன், ஒரு மெசஜ் என்று இருந்தோம், அதன் பின் 2ஜி, 3ஜி வந்தது. இதைத் தொடர்ந்து தற்போது 4ஜி அதிவேக இண்டெர்நெட் வசதி கிடைக்கிறது, போனின் வேகம் அந்த நெட்வேர் வேகத்திற்கு அருகிறது.
அந்த வகையில், தற்போது உலகின் ஒரு சில நாடுகளில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இப்போது 5 ஜி போன்களை இந்த ஆண்டில் இருந்து அதிகமாக வெளியிட ஆரம்பித்துவிட்டன.
பெரும்பாலான நாடுகளில் இன்னும் 5ஜி நெட்வொர்க் வரவில்லை என்றாலும், அந்த நாடுகளில் எல்லாம் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டன. இதை உங்கள் நாட்டில் 5ஜி வந்த பின்பு பயன்படுத்தி கொள்ளலாம் என்று நிறுவனங்கள் கூறுகின்றன.
அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன் வருகை அதிகரித்துவிட்டது. அந்த வகையில், பிரபல ஆங்கில ஊடகமான டிஜிட்டல் டிரண்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களை ஆராய்ந்து அதில் எது சிறந்த ஸ்மார்ட்போன் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக அந்த 5ஜி ஸ்மார்ட் போன் எவ்வளவு மணி நேரம் சார்ஜ் நிற்கிறது, இண்டெர்நெட்டின் வேகம், போன் டிஸ்பிளே, பேட்டரியின் ஆயுள் மற்றும் அந்த போனில் இருக்கும் 5ஜி மோடமின் வளர்ச்ச்சி, 5 நெட்வோர்க்குடன் எப்படி செயல்படுகிறது என்பதன் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.’
அந்த போனின் விவரங்கள் மற்றும் விலை பட்டியலைப் பார்போம்
Samsung Galaxy Z Fold 2(ஆரம்ப விலை 1,34,999 ரூபாய்)
Apple iPhone 12 Pro(1,19,900 ரூபாய்)
Samsung Galaxy S21 Ultra(ஆரம்பவிலை 95999 ரூபாய்)
Samsung Galaxy S21(ஆரம்ப விலை 60999 ரூபாய்)
மடிக்கும் தன்மை கொண்ட Samsung Galaxy A52 5G(ஆரம்ப விலை 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இப்போது கிடைக்கிறது)