ஆரோக்கியமாக வாழ.., சிறந்த காலை உணவுகள்: மருத்துவர் கூறும் விளக்கம்
பொதுவாக உடல் எடையை குறைக்கும் பொழுது காலை உணவை தவிர்ப்பது அல்லது குறைவான உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றை கடைபிடிப்பது மிகவும் தவறானது.
காலை உணவு என்பது மிகவும் அவசியமான ஒன்று. காலை உணவை தவிர்ப்பது நாள் முழுவதும் சோர்வாகவும், புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கும்.
அந்தவகையில், ஆரோக்கியமான முறையில் காலை உணவு இருக்க மருத்துவர் சிவராமன் சில சத்தான காலை உணவை பகிர்ந்திருக்கிறார்.
Shutterstock
சிறந்த காலை உணவுகள்
தித்திப்பான பழங்கள்- வாழைப்பழம், கொய்யாப்பழம் போன்றவை சிறந்து காலை உணவாகும்.
வேகவைத்த உணவு- உணவு வகைகளிலேயே இது வயிற்றுக்கு இதமானவை. புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை, இட்லி ஆகியவையாகும்.
சிகப்பு அரிசி அவல்- அவல் உருண்டை, அவல் உப்புமா, அவல் லட்டு போன்றவற்றை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
தினை- கண்களுக்கு நல்லது. இதனை பொங்கல், உப்புமா போன்றவை செய்து காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
ராகி- இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. இதில் கஞ்சி, கூல் போன்ற உணவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
கம்பு- இரும்புச்சத்து நிறைந்தது. கம்பை சோறு, கூல் போன்றவற்றை செய்து காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
சோளம்- புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், இரும்புசத்து போன்றவை நிறைந்துள்ளன.
குதிரைவாலி- நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது.
வரகு- வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இதில் உப்பு, பொங்கல் போன்றவற்றை செய்து காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |