உலகளவில் குறைவான விலையில் சிறப்பான அம்சங்களோடு தற்போது விற்பனையில் உள்ள டாப் 3 செல்போன்கள்!
உலகிலேயே தற்போது சிறப்பான, தரமான கொண்ட மற்றும் பட்ஜெட் குறைவான விலையில் விற்பனையாகும் செல்போன்கள் குறித்து பார்க்கலாம்.
இது குறித்த தகவலை Tom's Guide இணையதளம் வெளியிட்டுள்ளது.
Google Pixel 4a
$349 விலையில் Google Pixel 4a ஐ விட சிறந்த ஸ்மார்ட்போனை தற்போது நீங்கள் காண முடியாது. இதன் டிஸ்ப்ளே 5.81 இன்ச் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி RAM உடன் வரும் இந்த போனின் ரியர் கேமரா 12.2MP ஆக உள்ளது. முன் கேமரா 8MP ஆகும்.
Google Pixel 4a போனை ஏன் வாங்கலாம்?
சிறந்த-இன்-கிளாஸ் கேமரா.
கவர்ச்சிகரமான வடிவமைப்பு.
குறைந்த விலை.
iPhone SE
$399 என்ற விலையில் இந்த ஐபோனை வாங்கலாம். ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ரோ போன்றே வேகமான செயல்திறனை ஐபோன் SE வழங்குகிறது என்பது கூடுதலான சிறப்பம்சம் ஆகும். இது 4.7 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் ரியர் கேமரா 12MP ஆகும், முன் பக்க கேமரா 7MPல் வருகிறது.
iPhone SEஐ எதற்காக வாங்க வேண்டும்?
வேகமான A13 பயோனிக் செயல்திறன்
வயர்லெஸ் சார்ஜிங் வசதி
OnePlus Nord N200 5G
The OnePlus Nord N200 Nord N100ன் தொடர்ச்சியாக குறைந்த விலையில் 5ஜியுடன் வருகிறது. பல சிறந்த அம்சங்களை இந்த போன் வழங்குகிறது, 90Hz டிஸ்ப்ளே, 5G மற்றும் பெரிய பேட்டரியை $240க்கு வழங்குகிறது.
ஆனால் சில சமரசங்களை இந்த போன் வாங்கும் போது செய்து கொள்ள வேண்டியது உள்ளது. அதாவது, Nord N200 இல் கேமரா செயல்திறன் மிகவும் குறைவு. பட்ஜெட் உங்கள் முக்கிய பிரச்சினையாக இருந்தால் மற்றும் நீங்கள் 5G விரும்பினால், இது வாங்க வேண்டிய போன் தான்..!!
OnePlus Nord N200 5G எதற்காக வாங்க வேண்டும்?
90Hz டிஸ்ப்ளே
நல்ல ஆயுளை கொடுக்கும் பேட்டரி
$300க்கும் குறைவான விலையில் 5G சாதனம்.