உலக உணவுப் பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக உக்ரைனுக்கு பிரான்ஸ் செய்துள்ள மிகப்பெரிய உதவி
உக்ரைன் போர் காரணமாக, எதிர்பாராத வகையில் உலகம் முழுவதும் உணவுப் பிரச்சினை உருவாகத் துவங்கியுள்ள நிலையில், அதை தவிர்க்கும் வகையில் பிரான்ஸ் உக்ரைனுக்கு மிகப்பெரிய உதவி ஒன்றைச் செய்துள்ளது.
ஆம், உக்ரைனுக்கு 31 டன் விதைகளை பிரான்ஸ் அனுப்பியுள்ளதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய உணவு தானியங்கள் உற்பத்தியாளரான பிரான்சிலிருந்து உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவியானது, 260,000 டன் உணவை உற்பத்தி செய்ய உக்ரைனுக்கு உதவியாக இருக்கும். அத்துடன், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதால் உணவுப் பாதுகாப்பின் மீது ஏற்பட்டுள்ள பயங்கர தாக்கத்தை இந்த உதவி வலுவிழக்கச் செய்யும் என்கிறது பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம்.
உக்ரைனுக்கு பிரான்ஸ் அனுப்பியுள்ள விதைகளில் பீட்ரூட் விதைகள், கேரட் விதைகள், முட்டைகோஸ் விதைகள் மற்றும் தக்காளி விதைகளும் அடங்கும்.
ஏற்கனவே. ஏப்ரல் மற்றும் மேயில், 600 டன் உருளைக்கிழங்கு விதைகளை உக்ரைனுக்கு பிரான்ஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.