இரயில் தண்டவாளத்தில் ஆணின் சடலம்: பொதுமக்கள் உதவி கோரும் சுவிஸ் பொலிசார்
சுவிட்சர்லாந்தில் இரண்டு ரயில் நிலையத்திற்கு இடையே ஆணின் சடலம் ஒன்றை ரயில் சாரதி ஒருவர் காண நேர்ந்த சம்பவம் தற்போது பொலிஸ் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
பாஸல் மண்டலத்தில் SBB மற்றும் St. Johann ரயில் நிலையங்களுக்கு நடுவே தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை காலை 6.15 மணியளவில் சடலம் ஒன்று கிடப்பது ரயில் சாரதி ஒருவரின் பார்வையில் பட்டுள்ளது.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் குற்றவியல் பொலிசார் சடலத்தை மீட்டதுடன், அது தொடர்பில் விசாரணையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அவசர உதவிக்குழுவினருக்கும் பொலிசாருக்கும் உடனடியாக தகவல் அளித்துள்ளார் அந்த சாரதி. இதனையடுத்து மருத்துவ உதவிக்குழுவினரும் மருத்துவர் ஒருவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
ஆனால், ஏற்கனவே அந்த நபர் இறந்திருந்ததால், அவரது உடலை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகிறது.
மட்டுமின்றி அவர் எப்படி இறந்தார் என்பது தொடர்பிலும் மருத்துவ அறிக்கைக்காக பொலிசார் காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் மண்டல பொலிசாரை நாட வேண்டும் என்ற கோரிக்கையை விசாரணை அதிகாரிகள் தரப்பு முன்வைத்துள்ளது.