அமெரிக்காவை தாக்கிய வெடிகுண்டு பனிப்புயல்: அடுத்தடுத்து மோதிய 46 கார்கள்…4 பேர் பலி
அமெரிக்காவின் ஓஹியோவில் பனி மூடப்பட்ட சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான கார் விபத்தில் இதுவரை 4 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல்
அமெரிக்காவை வெடிகுண்டு சூறாவளி( bomb cyclone) என்று அழைக்கப்படும் மிக பயங்கரமான பனி புயல் தாக்கி வருகிறது.
இந்த பனி புயல் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கான விமானங்கள் தங்கள் பயணங்களை ரத்து செய்து இருப்பதாக அறிவித்துள்ளன, அத்துடன் நாட்டின் பெரும்பாலான மக்கள் தங்களது வானிலை எச்சரிக்கை எதிர்கொண்டுள்ளனர்.
சுமார் 5,50,000 வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் மின்சாரம் இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த பனிப்புயல் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய குளிர்காலப் புயலாக பார்க்கப்படுகிறது.
நான்கு பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் எரி கவுண்டியில் உள்ள ஓஹியோ சாலையை பனி மூடியதை தொடர்ந்து, சுமார் 46 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் முன்னதாக ஒருவர் மட்டுமே உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சில மணி நிமிடங்களுக்கு பிறகு உயிரிழப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்து இருப்பதாக ஓஹியோ மாநில நெடுஞ்சாலை ரோந்து படை தெரிவித்துள்ளது.
விபத்து ஏற்பட்ட சில மணி நேரத்திற்கு பிறகு இருபுறங்களிலும் சாலைகள் மூடப்பட்டன, ஆனால் அவை தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓஹியோ மாநில நெடுஞ்சாலை ரோந்து அதிகாரிகள், ஒயிட் அவுட் நிலைமை இன்னும் நீடிக்கிறது, எனவே பயணங்களை தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
Can you find the warm spots on this map?
— NWS Key West (@NWSKeyWest) December 24, 2022
In the #FloridaKeys tonight...
?Lows in the 50s; coldest Upper Keys.
?North winds ~20 mph.
Mostly cloudy & windy.
Much cooler & less humid.
6 PM temperature map courtesy of the @okmesonet#flkeys #FLKeys #KeyWest #MarathonFL #KeyLargo pic.twitter.com/EpR1emDPqY