பிரித்தானிய மன்னராட்சியையே ஆட்டம் காணவைக்க இருக்கும் இளவரசர் ஹரியின் புத்தகம்: வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்
இளவரசர் சார்லஸ் மன்னராகும்போது, அவரது மனைவியாகிய கமீலா ராணி என அழைக்கப்படுவார் என பிரித்தானிய மகாராணியார் அறிவித்ததைத் தொடர்ந்து கமீலாவுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
அதற்காக, தன் தாய்க்குப் போட்டியாக பார்க்கப்பட்ட கமீலாவை இளவரசர் வில்லியம் கூட பாராட்டியுள்ள நிலையில், இளவரசர் ஹரியோ இதுவரை கமீலாவைப் பாராட்டி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
இந்நிலையில், அவர் கமீலாவைக் குறித்து என்ன நினைக்கிறார் என்ற விடயம் குறித்து இளவரசர் ஹரி தனது புத்தகத்தில் எழுதியுள்ளதாகவும், அந்த புத்தகம் இந்த ஆண்டு இறுதிவாக்கில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த புத்தகத்தில் இளவரசர் ஹரி குறிப்பிட்டுள்ள விடயங்கள், மன்னராட்சியையே ஆட்டம் காணவைக்கும் வகையில் இருக்கும் என ஹரியின் நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த புத்தகத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது குறித்து மகாராணியாருக்கோ, இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியமுக்கோ எதுவும் தெரியாது என கூறப்படும் நிலையில், அந்த புத்தகம் ஹரிக்கும் ராஜ குடும்பத்துக்கும் இடையிலான உறவை மேலும் சேதப்படுத்தும் என ராஜ குடும்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.