வெளிநாட்டுச் சுற்றுலாவின்போது சுறாமீன்களை தொட்டுப்பார்த்த சிறுவன்: அடுத்து நடந்த பயங்கரம்...

United Kingdom
By Balamanuvelan Aug 08, 2022 01:20 PM GMT
Report

*சுறாக்களுடன் மனிதர்கள் நீந்துவதைக் கண்ட சிறுவனுக்கு ஏற்பட்ட ஆசை.

*தவறான நேரத்தில் தண்ணீரில் இறங்கியதால் சுறாக்கள் தாக்கியதாக கூறும் அமைப்பாளர்கள்.

பஹாமாஸ் தீவுகளுக்கு தன் குடும்பத்தாருடன் சுற்றுலா சென்றிருந்த பிரித்தானியச் சிறுவன் ஒருவன், ஆசையுடன் சுறாமீன்களைத் தொட்டுப்பார்த்தபோது எதிர்பாராத பயங்கரம் ஒன்று நிகழ்ந்தது.

எட்டு வயதான Finley Downer, தன் பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் பஹாமாஸ் தீவுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தான்.

அங்கு சில உயிரினங்களுடன் விளையாடுவதற்காக அனுமதிச்சீட்டு பெற்றிருந்த நிலையில், பிள்ளைகள் தண்ணீரில் இறங்கி சுறாக்களுடன் விளையாடத் துவங்கியுள்ளார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக சுறாக்கள் Finleyயைத் தாக்க, ஐயோ, காப்பாற்றுங்கள் என சத்தமிட்டிருக்கிறான் அவன். உடனே, அவனது சகோதரியான Lilly கையைப் பிடித்து அவனைத் தண்ணீரிலிருந்து வெளியே தூக்கியிருக்கிறாள்.

வெளிநாட்டுச் சுற்றுலாவின்போது சுறாமீன்களை தொட்டுப்பார்த்த சிறுவன்: அடுத்து நடந்த பயங்கரம்... | The Boy Who Touched The Sharks

Credit: Paul Tonge

உடனே Finley மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். அவனுக்கு கால்களில் பயங்கர காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவனது சிகிச்சைக்காக கணிசமான தொகை செலவிடப்பட்டாலும், காயங்கள் காரணமாக நிரந்தரமாக வடுக்களுடன்தான் அவன் வாழவேண்டியிருக்கும்.

உண்மையில் nurse sharks என்னும் சுறாக்கள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாதவை ஆகும். ஆனால், முறையான வழிகாட்டிகள் யாரும் இல்லாமல் தாங்களே சுறாக்களுடன் இறங்கியதாலேயே இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததாக அந்த சுறாக்கள் மைய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த சுறாக்களுக்கு உணவளிக்கப்படும் நேரத்தில் Finley தண்ணீரில் இறங்கியதால், அவை அவனைத் தாக்கியிருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.  

வெளிநாட்டுச் சுற்றுலாவின்போது சுறாமீன்களை தொட்டுப்பார்த்த சிறுவன்: அடுத்து நடந்த பயங்கரம்... | The Boy Who Touched The Sharks

Credit: Paul Tonge

வெளிநாட்டுச் சுற்றுலாவின்போது சுறாமீன்களை தொட்டுப்பார்த்த சிறுவன்: அடுத்து நடந்த பயங்கரம்... | The Boy Who Touched The Sharks

Credit: Paul Tonge

வெளிநாட்டுச் சுற்றுலாவின்போது சுறாமீன்களை தொட்டுப்பார்த்த சிறுவன்: அடுத்து நடந்த பயங்கரம்... | The Boy Who Touched The Sharks

Credit: Paul Tonge

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US