மேகனை புறக்கணித்த பிரித்தானியா மகாராணியார்... இளவரசி கேட்டுக்கு கொடுத்துள்ள பரிசு
சமீபத்தில் நிகழ்ந்த கிறிஸ்துமஸ் கேரல் நிகழ்ச்சி ஒன்றில், பிரித்தானிய மகாராணியாருக்கு சொந்தமான வைரம் மற்றும் நீலமாணிக்கக் கற்கள் பதித்த கம்மல்களை பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியான இளவரசி கேட் அணிந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ராஜ குடும்ப நிபுணரான Daniela Elser, கேட், மகாராணியாரின் நகைகளை அணிந்திருப்பது இது இரண்டாவது முறை என்கிறார்.
அவற்றை மகாராணியார் நிரந்தரமாகவே கேட் அணிந்துகொள்வதற்காக கொடுத்துவிட்டதாக தான் நம்புவதாக தெரிவிக்கிறார் அவர்.
முன்னாள் நடிகையும் இளவரசர் ஹரியின் மனைவியுமான மேகனுக்கு அவரது மாமியாரான இளவரசி டயானாவின் நகைகள் கிடைத்திருக்கலாம். ஆனால், இளவரசி கேட்டுக்கோ, மகாராணியாரின் நகைகளே கிடைத்துள்ளன. இந்த வாய்ப்பு மேகனுக்கு இல்லை என்று கூறியுள்ளார் Elser.