கொரோனா அச்சத்தில் பிரித்தானிய மகாராணியார்... அரண்மனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம்
பால்மோரல் அரண்மனையில் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுள்ளதைத் தொடர்ந்து அரண்மனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய மகாராணியார், இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசி பீட்ரைஸ், அவரது கணவர் doardo Mozzi, இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சோஃபி ஆகியோர் ஸ்காட்லாந்திலுள்ள பால்மோரல் அரண்மனையில் உள்ளனர்.
இந்நிலையில், அரண்மனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், பணியாளர்களுக்கான கேன்டீன் மற்றும் மதுபான விடுதி ஆகியவை மூடப்பட்டுள்ளன.
மற்ற பணியாளர்கள் மாஸ்க் அணியுமாறும், சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகாராணியாரும் ராஜ குடும்பத்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக கருதப்படுகிறது.
மகாராணியார் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியும் பெற்றுக்கொண்டார் என்றாலும், அவருக்கு 95 வயதாகும் நிலையில் அவரது பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் ஒருவித அச்சம் உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.