வெளிநாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் இதை நிரூபிக்க வேண்டும்! இல்லையெனில்..?
பிரித்தானிய மக்கள் நாளை முதல் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தங்களுக்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதை நிரூபிக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அப்படி நிரூபிக்க தவறினால் 200 டொலர் அபராதம் விதிக்கப்படும் என பிரித்தானிய போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
பயணிகள் மூன்று பக்க படிவத்தை அரசாங்கத்தின் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயணத்திற்கு முன் கையொப்பமிட வேண்டும்.
தங்கள் பயணத்திற்கான காரணத்தைக் கூறும் படிவத்தை நிரப்பத் தவறும் எவரும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படமார்கள், அல்லது அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வேலை, தன்னார்வ தொண்டு, கல்வி, மருத்துவம் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற சில நிகழ்வுகளைத் தவிர வேறு எதற்காகவும் வெளிநாட்டுக்கு பயணம் செய்வது சட்டவிரோதமானது.
அண்மைய வாரங்களில் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் பொலிஸார் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், திங்கள்கிழமை முதல் அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 6,400 டொலர் வரை அபராதம் விதிக்கப்படும்.