விலைவாசி உயர்வை சமாளிக்க தனது பணியாளர்கள் அனைவருக்கும் திடீர் ஊதிய உயர்வு அளித்துள்ள பிரித்தானியர்...
தன்னிடம் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் திடீர் ஊதிய உயர்வொன்றை அறிவித்துள்ளார் பிரித்தானியர் ஒருவர்.
குளிர்காலத்தில் விலைவாசி இன்னமும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.
மக்கள் பலர் விலைவாசி உயர்வை சமாளிக்கத் தடுமாறி வரும் நிலையில், தன்னிடம் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் திடீர் ஊதிய உயர்வொன்றை அறிவித்துள்ளார் பிரித்தானியர் ஒருவர்.
4Com என்னும் தொலைபேசி நிறுவனத்தின் உரிமையாளரான Daron Hutt, ஏற்கனவே மின்சாரம், எரிவாயு போன்ற விடயங்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், வரும் குளிர்காலத்தில் அவை இன்னமும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், தன்னிடம் பணியாற்றும் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Daron Huttஇடம் 431 பணியாளர்கள் பணியாற்றும் நிலையில், அவர் ஆளுக்கு 200 பவுண்டுகள் ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளார். அதுவும், உடனடியாக அமுலுக்கு வரும் இந்த ஊதிய உயர்வு இந்த மாதத்திற்கு மட்டுமல்ல, அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த 200 பவுண்டுகள் தொடர்ந்து அளிக்கப்படும் என்று Mr Hutt தெரிவித்துள்ளார்.
Image: 4Com
தனது தொழில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது என்று கூறியுள்ள Mr Hutt, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தனது பணியாளர்களுக்கு உதவும் உதவும் நிலையில்தான் தனது நிறுவனம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான நேரத்தில் தனது பணியாளர்கள் மீது அக்கறை காட்டும் Mr Huttஐ பிரித்தானிய ஊடகங்கள் ஹீரோ என வர்ணித்துள்ளன.