கொரோனாவிலிருந்து விடுபட்டார் பிரித்தானிய மகாராணியார்: பேரப்பிள்ளைகளைப் பார்க்க ஓடோடிச் சென்ற பாட்டியாரின் பாசம்
கடந்த வாரம் பிரித்தானிய மகாராணியாருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளார்.
எப்போதுமே தன் பேரப்பிள்ளைகள் மீது அளவுகடந்த பாசம் கொண்ட மகாராணியார், கொரோனாவிலிருந்து விடுபட்டதும் தன் பேரப்பிள்ளைகளைக் காண பிராக்மோர் காட்டேஜுக்கு விரைந்துள்ளார்.
பிராக்மோர் காட்டேஜில் தனது பேரப்பிள்ளைகள் சிலருடன் வார இறுதியை செலவிட்டுள்ளார் அவர்.
அங்கு இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், தம்பதியரின் பிள்ளைகள், இளவரசி பீட்ரைஸ் மற்றும் பீட்ரைஸின் மகளான Siennaவையும் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்டுள்ளார் அவர்.
விண்ட்சரில் கொரோனா தொற்று பரவல் உருவானதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு ஆளான மகாராணியாரது உடல் நிலையில், தற்போது நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக கூறப்படுகிறது.