சொன்னதை செய்துகாட்டிய பிரித்தானிய மகாராணியார்...
தான் பதவியேற்கும்போது, தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைப்பேன் என்று வாக்களித்தார் பிரித்தானிய மகாராணியார்.
தான் சொன்னதுபோலவே கடைசிவரை தன் மக்களுக்காக் உழைத்து ஓய்ந்திருக்கிறார் மகாராணியார்.
ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் அனைவருமே பதவிப்பிரமாணம் எடுக்கும்போது, கடைசிவரை நாட்டுக்காவும் நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன் என்றுதான் உறுதிமொழி அளிக்கிறார்கள்.
ஆனால், அத்தனை பேருமே தாங்கள் சொன்னதை நிறைவேற்றுகிறார்களா?
உலகம் முழுவதுமே, மன்னராக அல்லது மகாராணியாக பொறுப்பேற்றுவிட்டு பாதியில் தங்கள் பதவியைத் துறந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
“I declare before you all that my whole life, whether it be long or short, shall be devoted to your service and the service of our great imperial family to which we all belong,”
— ??? ????????? & ?????????? (@cornwallsnews) September 8, 2022
.#thequeen #queenelizabeth pic.twitter.com/m2NyWGiK6I
ஜப்பான், சீனா, ரோம், ஸ்பெயின், ஸ்வீடன், நேபாளம், பிரான்ஸ், ஆஸ்திரியா, பல்கேரியா, கொரியா, ரஷ்யா, ஈரான், வியட்நாம், அரேபியா, வாடிகன், மலேசியா என பல நாடுகளின் தலைவர்கள் தங்கள் பதவியை பாதியில் துறந்திருக்கிறார்கள்.
குறிப்பாக, காதலுக்காக தங்கள் பதவியைத் துறந்தவர்கள் பலர்.
அதுவும், பிரித்தானிய வரலாற்றில், மகாராணியாரின் பெரியப்பாவான மன்னர் எட்வர்டே தன் பதவியைத் துறந்ததால்தான் மகாராணியாரின் தந்தையும், மன்னரின் தம்பியுமான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரானார்.
எட்வர்ட், விவாகரத்தான அமெரிக்கப் பெண்ணான வாலிஸ் சிம்சன் என்பவரைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால், இருமுறை விவாகரத்தான ஒரு பெண்ணை, அதுவும், அவரை முன்பு திருமணம் செய்தவர்கள் இருவரும் இன்னமும் உயிருடன் இருக்கும் நிலையில், திருமணம் செய்தால் எட்வர்ட் மன்னராக இருக்கமுடியாது என இங்கிலாந்து திருச்சபையும், ஒரு அமெரிக்கப் பெண்ணை ராணியாக ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானிய மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க, பதவியேற்று வெறும் 326 நாட்களிலேயே தனது மன்னர் பதவியைத் துறந்தார் எட்வர்ட். அவரது இடத்தில் மகாராணியாரின் தந்தையான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரானார்.
மகாராணியாரின் செல்லப்பேரனான ஹரியும் அதேபோல விவாகரத்தான ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்ததால், தனது கௌரவத்துக்குரிய பதவிகளை இழந்து, இன்று அவர் தன் பாட்டி மரணமடையும் நேரத்தில் அவருடன் இருக்கும் பாக்கியத்தைக்கூட இழந்திருக்கிறார்.
ஆனால், பிரித்தானிய மகாராணியார் தான் சொன்னதை செய்துகாட்டியிருக்கிறார்...
ஆம், திடீரென தன் தந்தை மரணமடைந்ததால் பிரித்தானியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நிலை இளம்பெண்ணான எலிசபெத்துக்கு ஏற்பட்டது.
Photo: Reuters
அன்று, தான் பிரித்தானியாவின் மகாராணியாக பொறுப்பேற்கும்போது, தனது உரையில், ’என் வாழ்நாள் முழுவதும், அது குறுகிய காலமாக இருந்தாலும் சரி, நீண்ட காலமாக இருந்தாலும் சரி, உங்களுக்காக சேவை செய்வேன் என உறுதியளிக்கிறேன்’ என்று கூறினார் அவர்.
அவர் சொன்னதுபோலவே, 96 வயதுவரை ஓயாமல் உழைத்துள்ளார் அவர்.
தனது கடைசி நாட்களில், தன்னால் சரியாக நடக்க முடியாத நிலையிலும்கூட, பிரித்தானியாவுக்கு ஒரு புதிய பிரதமரையும் பதவியிலமர்த்திவிட்டு, தான் சொன்னதுபோலவே, தன் கடமைகளை செவ்வனே முடித்துவிட்டுத்தான் ஓய்வெடுத்திருக்கிறார் மகாராணியார் என்றால் அது மிகையாகாது!
Photo: AFP