மூளையை தின்னும் கொடூர அமீபா.., அதன் அறிகுறிகள் என்ன?
முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்பது மூளையின் சவ்வு திசுக்களில் ஏற்படும் தொற்று பாதிப்பு ஆகும்.
இந்த தொற்று பாதிப்புக்கு காரணம் "நேக்லரியா போலேரி" என்னும் ஒற்றை உயிரணு உயிரினம் ஆகும்.
இதற்கு மூளையை தின்னும் அமீபா என்று மற்றொரு பெயரும் உண்டு.
கொடூர அமீபா
"நேக்லரியா போலேரியா" என்னும் இந்த ஒற்றை உயிரணு உயிரினம் உலகம் முழுவதும் உள்ள ஏரி, ஆறுகள், நன்னீர் தேக்கங்கள் மற்றும் சூடான நீரூற்றுகளில் காணப்படுகின்றன.
குறிப்பாக, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சூடான நீரிலும், சரியாக குளோரினேட் செய்யப்படாத நீச்சல் குளங்களிலும் அதிகம் காணப்படுகிறது.
குளங்கள் அல்லது ஏரிகளில் மூழ்கி குளிக்கும்போது இந்த அமீபா மனிதனின் மூக்கு வழியாக நுழைந்து நேரடியாக மூளைக்கு சென்று மூளையின் திசுக்களை வேகமாக தின்று அழிகிறது.
அதன் அறிகுறிகள்
இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விட்டால் ஆரம்ப அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி காணப்படும்.
மேலும், கழுத்து இறுக்கம், குழப்பம், மக்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கவனம் இல்லாமை, சமநிலை இழப்பு, வலிப்பு மற்றும் கண் முன் மாய தோற்றங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
நோய் தொற்று ஏற்பட்ட 12 நாட்களில் மரணம் நேர்கிறது.
எனவே, இந்த அமீபா தொற்று விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று தொற்று உயிரியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |