எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டபடி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்: உதவச் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கனடாவின் ஒன்ராறியோவில் நெடுஞ்சாலை ஒன்றில் எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டபடி கார் ஒன்று நிற்பதைக் கண்ட பொலிசார் உதவ விரைந்துள்ளார்கள்.
ஆனால், அந்த காரை நெருங்கிய பொலிசாருக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்திருக்கிறது.
ஆம், அந்தக் காருக்குள், துப்பாக்கி ஒன்றும் எக்கச்சகமான போதைப்பொருட்களும் இருந்துள்ளன.
உடனடியாக அந்தக் காரிலிருந்த, Sudburyயைச் சேர்ந்த 25 வயது நபர் ஒருவர், 25 வயது பெண் ஒருவர் மற்றும் ரொரன்றோவைச் சேர்ந்த 25 வயது ஆண் ஒருவர் ஆகியோரைக் கைது செய்துள்ளார்கள் பொலிசார்.
அவர்கள் மீது, குண்டுகள் நிரப்பப்பட்ட தடை செய்யப்பட்ட ஆயுதத்தை வைத்திருந்தது, போதைப்பொருள் வைத்திருந்தது முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
தங்களிடம் ஆயுதமும் போதைப்பொருட்களும் இருந்தும், அவர்கள் எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டபடி சாலையோரம் காத்திருந்தது ஏன் என தெரியவில்லை.
என்றாலும், குற்றச்செயல் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கு அந்த எச்சரிக்கை விளக்குகளே வழிவகை செய்ததுதான் வேடிக்கை!