இளவரசர் வில்லியம் கண்களில் பட்ட கவர்ச்சிக்கன்னி... வாழ்வையே மாற்றிய அந்த சம்பவத்தின் பின்னணியிலிருக்கும் நபர் குறித்த ஒரு சோக செய்தி
கல்லூரியில் படிக்கும் நாட்களில் ஒருநாள் ஒரு ஃபேஷன் ஷோவுக்கு சென்றிருந்தார் பிரித்தானிய இளவரசர் வில்லியம்.
அங்கே உள்ளாடைகள் பளிச்சென தெரியும் வகையில் மெல்லிய உடை உடுத்தி அழகு நடை பயின்ற ஒரு பெண்ணைக் கண்டார் அவர். அவ்வளவுதான், அங்கேயே அந்த பெண்ணிடம் வீழ்ந்துவிட்டார் அவர். அப்புறம் என்ன காதல்தான்!
காதலில் மோதல்கள், தற்காலிகப் பிரிவுகள் வந்தாலும், அந்த காதல் ஜெயித்தது. தோற்ற காதல்கள்தான் பிரபலமாகும் என்பார்கள். ஆனால், வில்லியமுடைய காதல் ஜெயித்தது. ஆம், அவர் அன்று அந்த ஃபேஷன் ஷோவில் பார்த்த அந்த பெண்தான் இளவரசி கேட். இன்றும் அந்த தம்பதியர் குடும்பமாக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
இப்படி பிரித்தானியாவின் அடுத்த மன்னரையும் ராணியையும் சேர்த்துவைக்க உதவியது Jake Hall என்பவர் ஆவார். அவர்தான் அந்த ஃபேஷன் ஷோவை ஏற்பாடு செய்தவர்.
ஆனால், அவருக்கு இப்போது ஒரு பெரிய சிக்கல். Jake கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது நிறுவனம் சீனாவில் டியூஷன் சென்டர் ஒன்றை நடத்திவந்த நிலையில், சீன அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி வெளிநாட்டவர்களை பணிக்கமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இனி அவரால் அந்த நிறுவனத்தை சீனாவில் நடத்த முடியாது. ஆகவே, அவசர அவசரமாக நிறுவனம் திவாலானதாக அறிவித்துவிட்டு சீனாவிலிருந்து தப்பி பிரித்தானியா வந்துவிட்டார் Jake.
Jake நிறுவனத்தை மூடிவிட்டு வந்துவிட்டதால், 1 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக கட்டணம் செலுத்தியுள்ள மாணவ மாணவிகளும், ஊதியம் கிடைக்காத ஆசிரியர்களும் கடும் கோபத்திலிருக்கிறார்கள். அவர்கள் உள்ளூர் பொலிசாரிடம் புகாரளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
ராஜா ராணியை சேர்த்துவைத்த Jake, கடைசியில் தன்னை நம்பியிருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பரிதாப நிலையில் விட்டுவிட்டு வரவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிவிட்டார்.