விக்ரமின் ரீல் மகளுக்கு கோடிகளில் சொத்து மதிப்பு!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாரா அர்ஜுன், தன்னுடைய 17 வயதில் ரூ.10 கோடி சொத்து மதிப்புக்கு சொந்தமாகியுள்ளார்.
இந்தியாவின் குழந்தை நட்சத்திர நடிகை
தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் அறியப்பட்ட பெயராகவும், முகமாகவும் இருக்கும் மூத்த நடிகர் ராஜ் அர்ஜுனின் மகள் சாரா அர்ஜுன். 2006 ஆம் ஆண்டு பிறந்த சாரா, 5 வயதில் இந்தி திரைப்படம் 404 மற்றும் தமிழ் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
முதன் முதலாக தமிழில், இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான தெய்வ திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இவர், சல்மான் கானின் ஜெய் ஹோ, இம்ரான் ஹாஷ்மியின் ஏக் தி தாயன், ஐஸ்வர்யா ராயின் ஜஸ்பா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும், சைவம் படத்தில் நாசருடன் நடித்த முக்கிய பாத்திரத்திற்காக சாரா அர்ஜுன் பாராட்டப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல், சித்திரையில் நிலா சோறு, விழித்திரு ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளம் வயது நந்தினியாக (ஐஸ்வர்யா ராய் நடித்த கதாபாத்திரம்) சாரா நடித்தார்.
இரண்டு பாகங்கள் கொண்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 800 கோடிக்கு மேல் சம்பாதித்தது. மேலும், சாராவுக்கு இந்தியா முழுவதும் அதிக அங்கீகாரத்தை அளித்தது.
17 வயதில் ரூ.10 கோடி
குழந்தை நட்சத்திரமான பேபி சாரா பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 10 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார குழந்தை நடிகை என்ற சாதனையை சாரா அர்ஜுன் பெற்றுள்ளார்.
இதற்கிடையில் இவர், விரைவில் நடிகர் விஜய்யுடன் இரண்டாவது கதாநாயகியாக ஒரு படத்தில் நடிப்பார் என்ற தகவலும் பரவி வருகிறது. எனினும், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |