நியாயமான பாரபட்சமற்ற குடியுரிமை நடைமுறை வேண்டும்: சுவிட்சர்லாந்தின் இளைய தலைமுறையினரின் விருப்பம்
சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான நடைமுறை எவ்வளவு கடினமான ஒன்று என்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்கலாம்.
வெளிநாட்டவர்களை அங்கீகரிப்பதில் சுவிஸ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினருக்கும், பொதுமக்களில் ஒரு பகுதியினருக்கும் ஒரு தயக்க மனப்பான்மை காணப்படுவதை எப்போதுமே உணர முடியும்.
வித்தியாசமான மனப்பான்மை கொண்ட இளைய தலைமுறை
ஆனால், சுவிட்சர்லாந்தின் இளைய தலைமுறையினரின் மனப்பான்மை வித்தியாசமாக இருக்கலாம் என தோன்றுகிறது.
காரணம், சுவிஸ் குடியுரிமை வழங்கும் நடைமுறையில் மாற்றம் தேவை என அவர்கள் கருதுவதுபோல் தெரிகிறது.
image - Keystone / Christian Beutler
நாடாளுமன்றத்தில் தங்கள் விருப்பத்தை தெரிவித்த சுவிஸ் இளைஞர்கள்
சுவிஸ் நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் இளைஞர்கள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்படுவதுண்டு.
இம்முறை நடந்த கூட்டத்தில் சராசரியாக 17 வயதுடைய 200 இளைஞர்கள் பங்கேற்றார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் தேசிய இளைஞர் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் குடியுரிமை மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் குறித்த இளைஞர்களின் எண்ணங்கள் வெளிப்பட்டன.
ஒரே சீரான, குறிக்கோளுடைய, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற குடியுரிமை நடைமுறையைத் தாங்கள் விரும்புவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
குடியுரிமை தொடர்பில் விருப்பம்போல ஆளுக்கொரு முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும், தொழிலாளர் சந்தையில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு மேம்பட்ட ஒருங்கிணைப்பு தேவை என்றும் சுவிஸ் இளைஞர்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளது, எதிர்காலத்திலாவது வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதை எளிதாக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.