இறுதிச் சடங்குகளை நடத்திய மறுநாளில் இறந்ததாக கருதப்பட்ட நபர் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி
இறுதி சடங்குகளை நடத்திய மறுநாளில் இறந்ததகாக கருதப்பட்ட நபர் உயிருடன் திரும்பி வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உயிருடன் வந்த இறந்த நபர்
இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத்தில் உள்ள நரோடா பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் சுதார் (43). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஒக்டோபர் 27 -ம் திகதி காணமால் போனார்.
பின்னர், நவம்பர் 10 -ம் திகதி அவரது உறவினர்கள் பொலிஸில் புகார் அளித்தனர். இந்நிலையில், 2 வாரங்கள் கழித்து சபர்மதி பாலத்துக்கு அருகில் உடல் ஒன்று சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் தோற்றம் பிரிஜேஷ் உடல் போன்று காணப்பட்டதால் அவரது உறவினர்கள் அந்த உடலுக்கு இறுதி சடங்குகளை செய்து முடிந்தார்.
பின்னர், மறுநாளில் இறந்த மகனை நினைவுகூரும் வகையில் அவரது தாயார் பிரார்த்தனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால், அந்த பிரச்சார கூட்டத்திற்கு எதிர்பாராத விதமாக இறந்ததாக கூறப்பட்ட பிரிஜேஷ் உயிருடன் மீண்டும் திரும்பி வந்தார். அவரை பார்த்த அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.
இதுகுறித்து பிரிஜேஷின் தாயார் கூறுகையில், "எனது மகனை காணவில்லை என்று அனைத்து இடங்களிலும் தேடினோம். பின்னர், எங்கும் கிடைக்காததால் பொலிஸில் புகார் கொடுத்தோம்.
எங்களை அழைத்து பொலிஸார் அடையாளம் காட்ட கூறியபோது உடல் சிதைந்த நிலையில் இருந்ததால் பிரிஜேஷ் என்று தவறாக நினைத்து இறுதி சடங்குகளை செய்தோம். பிரிஜேஷ் மீண்டும் கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி" என்றார்.
இந்த சம்பவத்தில் தற்போது என்ன சிக்கல் என்றால், பிரிஜேஷ் குடும்பத்தினர் அடக்கம் செய்த உடல் யாருடையது என்ற பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |